திருச்சியில் ரூ.33 லட்சம் மதிப்பில் நகைகள் கொள்ளை - பொதுமக்கள் அச்சம்
திருச்சியில் பீரோவில் தங்கச் செயின் மற்றும் டாலர், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட சுமார் 32 பவுன் தங்க நகையையும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணமும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் சாலை கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி (60). சந்திரசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு பொன் நகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விடுகிறார். இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்ற வசந்தி அறைக்கு சென்று அங்குள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்த பீரோவில் தங்கச் செயின் மற்றும் டாலர், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட சுமார் 32 பவுன் தஙக நகையையும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணமும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் திருட்டு நடந்து இருப்பது தனலட்சுமிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனலட்சுமி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
மேலும் இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்திய போது வீட்டின் அறையில் 4, 5 பீரோவில் இருக்கும் பொழுது குறிப்பாக நகை, பணம் உள்ள பீரோவை மட்டும் சாவி போட்டு யாரோ திருடி இருப்பது தெரிய வந்தது. மேலும் பீரோவின் சாவியை தனலட்சுமி ஒரு இடத்தில் வைப்பது வழக்கம். அந்த இடத்தில் இருந்து சாவியை எடுத்து பீரோவை வருமா சாமி திறந்து நகை பணத்தை எடுத்துள்ளனர். எனவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் மர்ம ஆசாமி யாரோ தான் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். திருட்டு போலி நகை பணத்தின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மற்றொரு திருட்டு சம்பவம்: சென்னை கேளம்பாக்கம் ராஜேஷ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (51). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்மிடுவதற்காக ஒரு காரில் நேற்று புறப்பட்டு சென்றனர். நள்ளிரவை கடந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அப்போது 42 சவரன் நகை மற்றும் 7 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை ஒரு பையில் போட்டு காரின் முன் பகுதியில் வைத்திருந்தனர். பின்னர் ஓய்வு முடித்து எழுந்து மீண்டும் புறப்பட தயாராகி விட்டு பார்த்த போது நகை மாற்றும் பணம் வைக்கப்பட்திருந்த பை திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாகன ஓட்டிகளை கடும் அச்சதிற்கு ஆளாக்கி உள்ளதுடன், பாதிக்கட்டவர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.