மேலும் அறிய

கல்லூரி மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை-அத்தை கைது

திருச்சி கல்லூரி மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள ஒரு புதரில் கடந்த 5-ந்தேதி பிறந்து சில மணி நேரங்களான ஒரு அழகான ஆண் சிசு வீசப்பட்டு அழுது கொண்டிருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் அந்த குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை பெற்றெடுத்தவர் ஜீயபுரம் எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி (வயது 19) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவியான அவர் திருமணம் ஆகாத நிலையில் காதலன் மூலமாக கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுள்ளார். பின்னர் சமூகத்தில் அசிங்கமாகி விடும் என நினைத்து மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை அவர் முதலில் வீசியது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்த நிலையில், குழந்தை பெற்ற அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று திருச்சி அரசு ம்ருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கலைவாணி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சிகிச்சையில் இருக்கும் போது கலைவாணி திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனது பெற்றோர் வாயில் விஷம் ஊற்றியதாக கூறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. 


கல்லூரி மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை-அத்தை கைது

இதைத்தொடர்ந்து போலீசார் திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில், மாஜிஸ்ட்ரேட்டுவிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தை பெற்று விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கலைவாணியின் தாயார் தோட்டத்துக்கு சென்ற நிலையில் மாணவியின் தந்தை செல்வமணி, அவரது சகோதரி மல்லிகா (கலைவாணியின் அத்தை) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை கலைவாணியிடம் கொடுத்து குடிக்க வலியுறுத்தியதாக எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்விடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த அடிப்படையில் மர்மச்சாவு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேற்கண்ட 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே போலீசாரின் கஸ்டடியில் இருக்கும் செல்வமணி மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

19 வயது கல்லூரி மாணவி 17 வயது சிறுவனுடன் உடலுறவு !! மாணவி கர்ப்பம் - சிக்கிய அதிர்ச்சி
19 வயது கல்லூரி மாணவி 17 வயது சிறுவனுடன் உடலுறவு !! மாணவி கர்ப்பம் - சிக்கிய அதிர்ச்சி
வேலியே பயிரை மேய்ந்த சோகம்! அரசு வேலை ஆசை காட்டி ரூ.10 லட்சம் சுருட்டிய புதுச்சேரி எஸ்.ஐ.!
வேலியே பயிரை மேய்ந்த சோகம்! அரசு வேலை ஆசை காட்டி ரூ.10 லட்சம் சுருட்டிய புதுச்சேரி எஸ்.ஐ.!
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
"அவரை சும்மா விடாதீர்கள் " கணவர் கொடுமையால் மனைவி தற்கொலை - செல்போனில் வீடியோ பதிவு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Embed widget