மேலும் அறிய
Advertisement
Crime: முசிறி அருகே இளைஞர் குத்திக்கொலை - 2 பேர் கைது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாலிபரை குத்திக்கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே சுக்காம்பட்டி கிராமத்தில் சோழராஜா பட்டாளம்மன் குடிபாட்டு கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்தி வரும் பங்காளிகள் திருவிழா நடத்தினர். இந்த திருவிழாவின் போது, மண்ணச்சநல்லூர் தாலுகா சுனைபுகநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பொங்கல் வைத்து விருந்து வைத்தார். இந்த விருந்திற்கு சுனைப்புகநல்லூரை சேர்ந்த பிச்சை மகன் தீபக் (18), பெயிண்டர் சென்றுள்ளார். இதேபோல் அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (31), உதய பிரகாஷ் (27) ஆகிய இருவரும் ராம்குமார் என்பவருடைய வீட்டின் விருந்துக்காக சென்றுள்ளனர். அப்போது தீபக், உதயகுமார், உதயபிரகாஷ் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் உதயகுமார், உதயபிரகாஷ் ஆகியோர் சேர்ந்து தீபக்கை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உதயகுமார், உதயபிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இது சம்பந்தப்பட்டதாக தப்பியோடியதாக கூறப்படும் விஜயகுமார், வெங்கடேஷ் ஆகிய இருவரை முசிறி போலீஸார் தேடி கொண்டு இச்சம்பவம் தொடர்பாக மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion