மேலும் அறிய

ஆம்பூரில் அதிர்ச்சி! 3 பள்ளி மாணவிகளுக்கு காரில் பாலியல் தொல்லை – 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் போக்சோவில் கைது!

ஆம்பூரில் 3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. சிறுவன் உட்பட 3 பேர் போக்சோவில் கைது.

ஆம்பூரில் 3 பள்ளி மாணவிகளை காரில் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 3 மாணவிகள் படித்து வரும் நிலையில், இந்த பள்ளி மாணவிகளிடம் பழகி வந்த நண்பர்கள் 3 பேர் மாணவிகளை ஆசை வார்த்தை கூறி காரில் கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

பின்னர் மாலை ஆகியும் மாணவிகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 3  மாணவிகளையும் பள்ளிக்கொண்டா அருகே பத்திரமாக மீட்டனர்.

 

அதனை தொடர்ந்து இந்த நிகழ்வு தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 18 வயதுடைய அனான் ஜலால் மற்றும் 17 வயது சிறுவன்  ஆகிய 3 பேரை ஆம்பூர் நகர போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து 17 வயது சிறுவனை ஜாமீனில் காவல்துறையினர் விடுவித்த நிலையில், அனான் மற்றும் ஜாலலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்த நண்பர்கள் மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.

போக்சோ சட்டத்தின் அம்சங்கள்

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.

சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget