மேலும் அறிய

லோன் தருவதாக கூறி கூலி தொழிலாளியிடம் மோசடி - மயிலாடுதுறையில் 3 பேர் கைது

சென்னையில் கால்சென்டர் அமைத்து பிரபல தனியார் நிதிநிறுவனம் என்று செல்போனில் பொதுமக்களை தொடர்பு கொண்டு பல லட்சம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த  3 பேரை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தசண்முகவேல் என்பவரின் மகன் 36 வயதான மணிகண்டன். மரவாடியில் கூலி வேலை  பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பாண்டிச்சேரியை சேர்ந்த  சுந்தரபாண்டியன் என்று அறிமுகம் செய்து கொண்ட செல்பொனில் தொடர்பு கொண்ட நபர் 2 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் (லோன்) தருவதாக கூறியுள்ளார். லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸிங்குக்கு முன் தொகையாக 8 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார். மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் 7340 ரூபாய் அனுப்ப சொல்லியுள்ளார். இதைத்தொடர்ந்து, பல செல்பேசி எண்களில் இருந்து பலர் மணிகண்டனை தொடர்பு கொண்டு கேட்டதையடுத்து, லோன் தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல தவணைகளாக மொத்தம் 67,880 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.

லோன் தருவதாக கூறி கூலி தொழிலாளியிடம் மோசடி - மயிலாடுதுறையில் 3 பேர் கைது

ஆனால், மணிகண்டனுக்கு லோன் கிடைக்கவில்லை. இதையடுத்து, இதுவரை கொடுத்த பணத்தை திரும்பத்தரும்படி கேட்டதற்கு மணிகண்டன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பதால், அதனை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் மேலும் 10,000 ரூபாய் கட்டவேண்டும் என கேட்டு வாங்கியுள்ளனர். அதன்பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஐ.டி பைல் செய்வதற்காக 11,700 ரூபாய் மற்றும் அதைத்தொடர்ந்தும் பலமுறை சிறுக சிறுக மொத்தமாக 1,12,780 ரூபாய் கட்டியுள்ளார். முடிவில், தான் முழுமையாக ஏமாந்ததும், தனது பணம் திரும்பக் கிடைக்காது என்பதும் தெரிந்த பின்னர் மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

லோன் தருவதாக கூறி கூலி தொழிலாளியிடம் மோசடி - மயிலாடுதுறையில் 3 பேர் கைது

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டடது தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி முடிவில் காட்டுமன்னார்கோயிலில் பதுங்கியிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த 22 வயதான சஞ்சய், 20 வயதான சித்தார்த்தன், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த 25 வயதான சையது அப்துல்கலாம் ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப் ஆன்ட்ராய்டு உள்ளட்ட 16 செல்போன்கள், 28 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

லோன் தருவதாக கூறி கூலி தொழிலாளியிடம் மோசடி - மயிலாடுதுறையில் 3 பேர் கைது

தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், தப்பியோடி தலைமறைவாகவுள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த அமர்நாத், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்கள் ஆவனங்களை கொடுக்கவோ அறிமுகம் இல்லாத செல்போன் எண்கள் மூலம் லோன் கொடுப்பதாக கூறுவதை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.   இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பறிமுதல் செய்த ஆவணங்களை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
TN Election 2026: தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? வெறும் பி.டி.ஆர் தான் – சுந்தர் சி சவால் !
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Embed widget