மேலும் அறிய

திருவாரூரில் நடுரோட்டில் தலை துண்டித்து இளைஞர் படுகொலை: 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென குமரேசன் மோட்டார் சைக்களை வழி மறித்தனர் இதில் குமரேசன் சுதாரிப்பதற்கு முன்னதாக அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர்

திருவாரூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருவாரூரில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.திரு வாரூர் அருகே உள்ள அகரதிருநல்லூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் குமரேசன் வயது 35. இவருக்கு சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமரேசன் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் சுசீலா என்பவருடன் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு அரிசி மூட்டையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென குமரேசன் மோட்டார் சைக்களை வழி மறித்தனர். இதில் குமரேசன் சுதாரிப்பதற்கு முன்னதாக அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். தலை முழுமையாக சிதைந்து சம்பவ இடத்திலே குமரேசன் துடி, துடித்து உயிரிழந்தார்.
 
இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒடி வருவதற்குள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரேசன் கொலை செய்யப்பட்டது அறிந்த உறவினர்கள், நண்பர்கள் உடனியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். இதில் ஆத்திரமடைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று பதட்டமான சுழ்நிலை ஏற்பட்டது. உடனியாக பஸ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் திருவாரூர்-அரசு மருத்துவக்கல்லூரி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
 
இதுகுறித்து திருவாரூர் நகர காவல்துறை  இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் நேரில் பார்த்த உறவினர் பெண் சுசீலாவிடம் குற்றவாளிகளின் அடையாளம் கண்டறிந்து பிடிப்பதற்கான தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு செல்போன் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன் கடந்த சில நாட்கள் முன்பு வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதே போல் பட்ட பகலில் வாலிபர் தலையை சிதைக்கும் வகையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக மிகுந்த வாகன போக்குவரத்து மிகுந்த நாகை தேசிய நெடுஞ்சாலை இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!
மயிலாடுதுறையில் கொடூர விபத்து: பொறியியல் கல்லூரி மாணவன் பலி - புதுமணத் தம்பதி உள்ளிட்ட மூவர் கவலைக்கிடம்!
மனைவி கண்ணெதிரே பயங்கரம் !! நடுரோட்டில் வழிமறித்து கணவன் வெட்டிக் கொலை
மனைவி கண்ணெதிரே பயங்கரம் !! நடுரோட்டில் வழிமறித்து கணவன் வெட்டிக் கொலை
"என் பொண்டாட்டிய பாரு..." நண்பர்களிடம் லட்சக்கணக்கில் வசூல்: மயிலாடுதுறையில் ஒரு சைக்கோ கணவனின் கொடூரம்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
Embed widget