திருவண்ணாமலை: மூதாட்டிக்கு குளிர்பானம் கொடுத்து நகை கொள்ளை - தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது...!
மூதாட்டிகளை குறிவைத்து மயக்க மருந்து கொடுத்து நகை கொள்ளையடித்த தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 6 சவரன் தங்க நகை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வந்தவாசி-திண்டிவனம் சாலை அண்ணா நகரை பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு, இவர் கடந்த 25ஆம் தேதி வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரில் மூன்று நபர்கள் அலமேலுவிடம், ஆசை வார்த்தை கூறி மேல்மருவத்தூருக்கு செல்கிறோம் என்று கூறி அலமேலுவை காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அலமேலுவிடம் கொடுத்த நிலையில் அதை குடித்த அலமேலு சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். பின்னர் அலமேலு அணிந்து இருந்த 6 சவரன் தாலி சரடு, தோடு உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளை அடித்து கொண்டு மயங்கிய நிலையில் இருந்த அலமேலுவை திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள சாலையில் விட்டுவிட்டுச் சென்றனர். பின்னர் 2 மணிநேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த அலமேலு பெரிய பாளையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அலமேலுவின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அலமேலுவின் கணவர் சக்கரவர்த்தி வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் .அப்போது காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான கார் என்னை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வந்தவாசி மும்முனி புறவழி சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சிசிடிவி கேமராவில் பதிவான கார் வந்தது அப்போது போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது காரில் இருந்த மூன்று நபர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர்.
பின்னர் அவர்களை வந்தவாசி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், அவருடைய தந்தை வாசுதேவன், உறவினரான சாரதா ஆகிய மூன்று நபர்கள் அலமேலுவை காரில் அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை கொள்ளையடித்தது ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் 3 நபர்கள் இதேபோல் பல பேரிடம் கொள்ளையடித்தும் பல குற்ற வழக்குகள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர்களை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் கார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் 3 பேரும் காரில் டிப்டாப்பாக குடும்பமாக சென்று 50 வயது முதல் 60 வயது வரை உள்ள மூதாட்டிகளை மட்டும் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.