Crime : அதீத காதலால் அடுத்தவர் கணவருடன் அறைக்கு சென்ற இளம்பெண்... பிணமாக மீட்பு!
திருவனந்தபுரம் தங்கும் விடுதியில் நகைக்கடை பெண் ஊழியரை படுகொலை செய்த கள்ளக்காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கேரள மாநிலம் கொல்லம் பரவூரை சேர்ந்தவர் 32 வயதான பிரவீன். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு முன்னணி நகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அதே கடையில் 23 வயதான காயத்ரி என்பவரும் பணிபுரிந்தார். முதலில் பிரவீன், காயத்ரியுடன் நட்பாகவே பழகி வந்தார். பின்பு அது அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தி காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் பிரவீனின் மனைவிக்கு தெரியவந்தது. உடனே அவர் கணவர் வேலை செய்யும் கடைக்கு வந்து புகார் அளித்ததோடு, காயத்ரியின் வீட்டிலும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து காயத்ரி அந்த கடையில் இருந்து விலகி வேறொரு நகைக்கடையில் வேலைக்கு சென்று விட்டார். அதேபோல், பிரவீனும் பணி மாற்றம் பெற்றுக்கொண்டு நாகர்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
தங்கும் விடுதியில் கொலை :
நேற்று முன்தினம் பிரவீன் காலை 10 மணிக்கு தம்பானூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். சிறிது நேரத்தில் காயத்ரியும் அங்கு வந்துள்ளார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் பிரவீன் மட்டும் தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இந்தநிலையில், நள்ளிரவு 12 மணியளவில் தங்கும்விடுதிக்கு பிரவீன் போன் செய்து, அறையில் பெண் இறந்து கிடந்ததாக கூறியுள்ளார். இதைகேட்டு லாட்ஜில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இளம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதன்பிறகு இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்நிலையத்தில் சரண் :
இதற்கிடையே தலைமறைவான பிரவீனை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று பிரவீன் பரவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, நானும், காயத்ரியும் பேசிக் கொண்டு இருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் தலையணையால் காயத்ரி முகத்தில் அமுக்கி கொலை செய்ததாக பிரவீன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்