மேலும் அறிய
தேனி சிறையில் அதிர்ச்சி: 17 கைதிகள் தப்பியோட்டம், தமிழகம் முழுவதும் பரபரப்பு!
மதுரையை சேர்ந்த 11 சிறைவாசிகள் தப்பியுள்ளதால் பரபரப்பு - காட்டு பகுதிகளுக்குள் ட்ரோன் மூலமாக தீவிர தேடுதல் பணி.

தேனி மாவட்ட சிறை
Source : whatsapp
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட்டம் - தப்பியோடி பதுங்கிய 4பேர் கைது - கேரள மாநில எல்லைகளில் தமிழக காவல்துறையினர் தீவிர சோதனை.
வலிப்புவந்துவிட்டதாக தகவல்
தேனி மாவட்டம் சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறை செயல்பட்டுவருகிறது. 4 பிளாக்குகளாக உள்ள இந்த சிறையில் 100க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு நள்ளிரவு 3 ஆவது பிளாக்கில் உள்ள சிறைவாசி ஒருவருக்கு வலிப்புவந்துவிட்டதாக தகவல்வந்த நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன் சிறை பிளாக் கதவை திறந்துள்ளார்.
17 பேர் சிறையில் இருந்து தப்பியோடினர்
அப்போது சிறிது நேரத்திலயே அந்த பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த சிறைவாசிகளான மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (என்ற) மதன், சிவகங்கை மாவட்டம் சுந்தர நடப்பு பகுதியைச் சேர்ந்த தருண்குமார், மதுரை சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த பாண்டி செல்வம், மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி, மதுரை TNHB காலனி பகுதியைச் சேர்ந்த பொன்முத்து செல்வம், மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், சேலம் மாவட்டம் தடகப்பாடி பகுதியைச் சேர்ந்த சபரிநாதன், கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த ரெஜின், மதுரை கீழக்குயில்குடி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், மதுரை வாடிப்பட்டி முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த முத்து இளங்கோவன், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா , மதுரை ஆளவந்தான் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற லிங்க பிரசாத், மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த ராஜா சிக்கந்தர்,.தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சோலை முகிலீஸ்வரர் மற்றும் தேனியை பிரவீன்குமார் உள்ளிட்ட 17 பேர் சிறையில் இருந்து தப்பியோடினர். அப்போது மேலும் இரு சிறைக்காவலர்களை லேசாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடிய சிறைவாசிகள் பதுங்கியுள்ளனரா என தேடிவருகின்றனர்.
காயமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன் கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக விரைந்துசென்ற தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நேரில் சென்றார். இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தி 17 சிறப்பு தனிப்படை காவல்துறையினரை நியமித்தார். இதனை தொடர்ந்து கேரள எல்லை பகுதிகளிலும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள எல்கை பகுதி முழுவதிலும் காவல்துறையினர் இரவு முழுவதிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். இதனிடையே காலை முதல் ட்ரோன் உதவியுடன் சிறையை ஒட்டியுள்ள பகுதிகளில் தப்பியோடிய சிறைவாசிகள் பதுங்கியுள்ளனரா என தேடிவருகின்றனர்.
தப்பியோடிய 11 பேர்
இரவு சிறையில் இருந்து தப்பியோடி 17 சிறைவாசிகளில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் தேவாரம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த ராஜா சிக்கந்தர், மதுரை சுந்தராஜாபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 4 பேர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய 11 பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மதுரை மாவட்ட எல்கை பகுதியான வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் சேலம், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறைவாசிகளும் தப்பிய நிலையில் தேனி ஆண்டிப்பட்டி கம்பம் ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குற்றவாளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட காவல்துறை சார்பில் தப்பியோடிய சிறை கைதிகள் பற்றி புகைப்பட விவரங்களுடன் பொதுமக்கள் தகவல் தெரிந்தால் தேனி மாவட்ட தனி பிரிவு அலுவலகமான 94 98 10 15 70 என்ற எண்ணிற்கும் தேனி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையான 9176104100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சிறையில் சிறைவாசிகள் தப்பிய விவகாரம் எதிரொலியாக தமிழகம் முழுவதிலும் உள்ள பாளையங்கோட்டை மதுரை உள்ளிட்ட சிறைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது மேலும் இன்றைய தினம் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட உள்ள குற்றவாளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
30 வயதிற்கு கீழுள்ள சிறைவாசிகள்
தேனி மாவட்ட சிறையில் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 17 சிறைவாசிகள் தப்பியோடிய நிலையில் அவர்கள் தப்பி செல்வதற்கான திட்டத்தை குழுவாக சேர்ந்து திட்டமிட்டனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தப்பியோடிய நபர்கள் மூலமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தப்பியோடிய நபர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய சிறைவாசிகள் குறித்த முழுமையான குற்ற பின்னணி மற்றும் தொடர்புகள் குறித்தும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய 17 சிறைவாசிகளில் ஏராளமானோர் 30 வயதிற்கு கீழுள்ள சிறைவாசிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக கொலை கொள்ளை முயற்சி
இந்த சிறைவாசிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக கொலை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டால் சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் என்ற அடிப்படையிலும் பாதுகாப்பு கருதி தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக வரலாற்றிலயே வேலூர் கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம் சிறையிலிருந்து LTTE அமைப்பைச் சேர்ந்த 43 சிறைவாசிகள் 150 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி தப்பித்த சம்பவத்திற்கு பின் 31 ஆண்டுகளை கடந்து பெரிய அளவிலான சிறைவாசிகள் தப்பியோட்ட சம்பவமாக தேனி மாவட்ட சிறையில் ஒரே பிளாக்கில் உள்ள 17 பேரும் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















