மேலும் அறிய

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எதிரே வந்த கேரளாவில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மற்றும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு. 

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி விபத்தில் உயிரிழந்தார்.

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் ( 34). திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக விஜயக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் போது கரடிப்பட்டி பிரிவு அருகே எதிரே கேரளாவில் இருந்து வந்த சிமெண்ட் லோடு லாரி விஜயகுமாரின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு வலது கால் மற்றும் உடல்களில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காவலரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே  சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

நொய்யல், அருகே நாடார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது முத்தனூர் வெள்ளக்கல் மேடு அருகே, வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஒருவர் சாலையின் குறுக்கே திடீரென வந்ததால் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குமார் மற்றும் குறுக்கே வந்தவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் மற்றும் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வரை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறுக்கே நடந்து வந்த போது விபத்துக்குள்ளான ஊட்டி உமர் கட்டேஜ் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மதுவிற்ற 14 பேர் கைது.

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விட்டதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்ஐ அலகு ராம் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் வாங்கல், வேலாயுதம்பாளையம், சின்ன தாராபுரம், வெங்கமேடு, தான்தோன்றி மலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக சண்முகம், திலகவதி, ராஜ் கண்ணு, குழந்தைமணி, வெள்ளைப்பதேவன், முருகேசன், லோகநாதன், சடையன், குமார், மகேஸ்வரி, ஜீவா, சுப்ரமணியன், மலர்விழி, ஆகிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்தும் 90 மதிப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget