திண்டிவனம் அருகே சாதி பெயரை திட்டி சிறுமியை அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் புகார்
திண்டிவனம் அருகே சிறுமியை சாதிப்பெயரை சொல்லி திட்டி சவுக்குக்கு குச்சியால் தாக்கியதில் சிறுமி மயக்கம்; காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடிமொழியனூர் கிராமத்தில் பிரபாகரன் என்பவரின் மகள் நித்தியஸ்ரீ (11). நித்தியஸ்ரீ தனது தாயான அமுதாவை தேடிக்கொண்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார் அப்பொழுது செண்டியம்பாக்கம் ஆற்றங்கரையோரத்தில் ஜெய் என்பவரின் நிலத்தில் நின்று கொண்டிருந்த நித்யஸ்ரீயிடம் கதிர்வேல் என்பவர் சாதியின் பெயரைச் சொல்லி இங்கே ஏன் நிற்கிறாய் என சவுக்குக் குச்சியால் தாக்கியுள்ளார்.
இதனை அபிராமி, பிரதீஸ்வரன் மற்றும் ஜெயமாலா மாரியம்மாள் ஆகியோர் அங்கிருந்து சம்பவத்தினை பார்த்துள்ளனர். கதிர்வேல் என்பவர் நித்யஸ்ரீ சவுக்கு குச்சியால் தாக்கியதால் நித்தியஸ்ரீ மயங்கி விழுந்துள்ளார், இதனைக்கண்ட அவரது ஜெயமாலா, மாரியம்மாள் குழந்தையை தூக்கிக்கொண்டு நித்தியஸ்ரீயை அவரது தந்தையிடம் வந்தனர், பின்னர் விழுப்புரம் அருகே இருக்கக்கூடிய முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். சிகிச்சை அளித்தபின் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக பிரபாகரன் புகார் அளித்துள்ளார்.
கடந்த 25ஆம் தேதி அளித்ததிலிருந்து தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும். இதைத் தொடர்ந்து தினமும் பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கு புகாரினை வழக்கு பதிவு செய்ய பிரபாகரன் வலியுறுத்திய போது போலீசார் இதற்கு செவிசாய்க்கவில்லை. மேலும் வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழித்து வருவதாக பிரபாகரன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அவர்களிடம் பிரபாகரன் புகார் அளித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களிடம் நித்தியஸ்ரீயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
என் மகளுடன் சென்ற அபிராமி, பிரதீஷ்வரன் மற்றும் ஜெயமாலா மாரியம்மாள் ஆகியோர் மேற்படி சம்பவத்தை பார்த்துள்ளனர் மயங்கி விழுந்த என் மகளை வீட்டிற்கு தூக்கி வந்தார்கள். நான் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்து 25-8-2021 மாலை 6 மணியளவில் புகார் கொடுத்தோம்,
மேற்படி புகார் தொடர்பாக இதுவரை வழக்குப் பதியவில்லை எனவே நாங்கள் தாழ்த்தப்பட்டோர் என தெரிந்தும் வேண்டும் என்று அலைக்கழிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் மேற்படி பெரியதச்சூர் காவல் சிறப்பு ஆய்வாளர் அருணாசலம் ஆய்வாளர் விநாயக முருகன் ஆகியோர் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவின் படி வழக்கு பதிவு செய்தும் நான் கொடுத்த புகாரின் மீது எஸ்சி எஸ்டி சட்டப்படி வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது