எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை: 22 பேர் உயிரை பறித்த ஓட்டுநர்.. 190 ஆண்டுகள் சிறை தண்டனை!
மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 22 பயணிகள் உயிர் இழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பன்னா என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் 22 பேர் பலி ஆகினர். இது குறித்து நடத்திய விசாரணையில் பயணிகள் பேருந்தை மெதுவாக இயக்க கூறியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் ஷம்சுதீன் பேருந்தை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தினார். இதனை அடுத்து பேருந்து ஓட்டுநர் ஷம்சுதீனுக்கு 19 குற்றப்பிரிவுகளில் கீழ் 10 ஆண்டுகள் வீதம் 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பேருந்தின் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
அது போல கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தின் சித்தி நகரில் இருந்து சத்னா நகரை நோக்கி 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது பாட்னா பகுதிக்கு அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த பெரிய கால்வாய்க்குள் கவிழ்ந்தது. பின்னர் தகவல் அறிந்த மீட்புப்படையினர், கால்வாயில் இருந்து 7 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 39 பேரின் உயிரிழந்த சடலங்களையும் மீட்டனர்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 லட்ச ரூபாய் அறிவித்தார். மேலும் காயமடைந்த அனைவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பாட்னா கிராமம் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து. இந்த விபத்து காாரணாமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டர். பேருந்தில் மொத்தம் பயணித்த பயணிகள் எத்தனை பேர் என்று உறுதியாகத் தெரியவில்லை. 60க்கும் மேற்பட்டோர் இருந்திருக்கலாம் என கூறப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதை ஆகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: க்ளிக்.. க்ளிக்! நச்சுனு 21 போட்டோ! 2021ல் பிரதமர் மோடியின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்பட கலெக்ஷன்!