மேலும் அறிய

பார்க்க கூடாததை பார்த்த கணவன்.. உடனே காலை பிடித்த மனைவி.. அடுத்து நடந்த கொடூரம்

உறவினர்களை வற்புறுத்தி மறுநாள் 14ம் தேதி பிரகாசின் உடலை அவரது மனைவி நாகலட்சுமி கிராமச்சடங்கு என்று கூறி அவசர அவசரமாக எரித்து விட்டார்.

தஞ்சாவூர்: ஆஸ்கர் அவார்டை பெற்றுவிடுவது போல் நடித்தால் விட்டு விடுவோமா என்று தட்டித்தூக்கினர் போலீசார் என்ன விஷயம். என்ன சம்பவம் தெரியுங்களா?

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்த விஸ்வலிங்கம் என்பவரது மகன் பிரகாஷ்(40). கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (35). இவர் கடந்த 13ம் தேதி தன் வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். ஆனால் இதுகுறித்து நாகலட்சுமி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்ல உறவினர்களை வற்புறுத்தி மறுநாள் 14ம் தேதி பிரகாசின் உடலை அவரது மனைவி நாகலட்சுமி கிராமச்சடங்கு என்று கூறி அவசர அவசரமாக எரித்து விட்டார். பிரகாஷ் உடலை தகனம் செய்யும் வரை கண்ணீரும், கதறலுமாகவே இருந்துள்ளார் நாகலட்சுமி. இது பிரகாசின் உறவினர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாகலட்சுமியின் அவசர, அவசரமான செயல்களும் அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.  

இந்நிலையில், இறந்து போன பிரகாஷ் மனைவி நாகலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த  வீரக்குமார்(25), என்பவருக்கும் தகாத உறவுகள் இருந்தது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ் மரணத்தில் மர்மம் இருப்பதாக, உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து மதுக்கூர் போலீசார் நாகலட்சுமியிடம் விசாரணை நடத்தியதில் எந்த தகவலும் தெரிவிக்காமல் நடித்துள்ளார். அப்புறமென்ன போலீசார் தங்கள் பாணியில் விசாரணையில் இறங்க பல திடுக் தகவல் வெளியானது. போலீசார் விசாரணையில் நாகலட்சுமி கூறியது இதுதாங்க.  எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த வீரக்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நாங்கள் இருவரும் தனிமையில் இருந்த போது, என் கணவர் பிரகாஷ் பார்த்து விட்டார். இதுகுறித்து தகராறு ஏற்பட்ட நிலையில் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று வேறு வழி இன்றி என் கணவர் பிரகாஷின் காலை நான் இறுக்கி பிடித்துக் கொண்டேன். பிறகு, பிரகாஷின் கழுத்தை வீரக்குமார் நெறித்து கொன்று துாக்கில் தொங்க விட்டார். பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டது போல் செட்டப் செய்து விட்டு வீரக்குமார் அங்கிருந்து சென்று விட்டார். நானும் கதறி அழுது நாடகமாடி உடலை எரித்து விட்டேன் என்று கூறி போலீசாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நாகலட்சுமியை கைது செய்தனர். மேலும்  தென்காசி பகுதியில் கோழிபண்ணை ஒன்றில் வேலை பார்த்து வரும், வீரக்குமாரையும் போலீசார் கைது செய்ய போலீசார் சென்றுள்ளனர். இறந்து போன பிரகாஷிற்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் பிரகாசின் உறவினர்கள் தரப்பில் கூறுகையில், நாகலட்சுமிக்கு இருந்த கள்ளத் தொடர்பு பிரகாசிற்கு தெரிந்து கண்டித்துள்ளார். ஆனால் அதை நாகலட்சுமி பொருட்படுத்தவில்லை. மேலும் நாகலட்சுமி வங்கி கணக்கில் அவரது அப்பா சேமிப்பாக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தையும் வீரகுமாரும், நாகலட்சுமியும் சேர்ந்து செலவு செய்து விட்டனர். இந்நிலையில் பிரகாஷ் தன் மகள் சடங்கிற்காக அந்த பணத்தை கேட்டதாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் வீரக்குமாருடன் சேர்ந்து தனது கணவரை நாகலட்சுமி கொலை செய்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ நடித்து நாடகமாடினாலும் சட்டம் கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget