மேலும் அறிய

330 கிலோ கஞ்சா வழக்கு; குற்றவாளி, உறவினர் வீட்டில் சிக்கிய ரூ.37.50 லட்சம் பணம்

330 கிலோ கஞ்சா வழக்கில் முக்கிய குற்றவாளியான கருப்பையா மற்றும் அவரது உறவினர் ரகுநாதன் வீட்டில் பலமணிநேரம் நடந்த சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்து போலீசாரிடம் சிக்கிய 330 கிலோ கஞ்சா வழக்கில் முக்கிய குற்றவாளியான கருப்பையா மற்றும் அவரது உறவினர் ரகுநாதன் ஆகியோர் வீட்டில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கின.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22ம் தேதி தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்– இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியில், போலீசார் ரோந்து சென்ற போது, அங்கிருந்த பாலத்தில் லாரியில் இருந்து, பெரிய பெரிய பொட்டலங்களை மூன்று பேர் காரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.  


330 கிலோ கஞ்சா வழக்கு; குற்றவாளி, உறவினர் வீட்டில் சிக்கிய ரூ.37.50 லட்சம் பணம்

இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, கார் மற்றும் லாரியை சோதனை செய்ததில், சுமார் 330 கிலோ அளவிலான கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரான தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதுார் ஊத்துமலையை சேர்ந்த பெரமராஜ் (34),  பேராவூரணி அருகே காரங்குடா பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (44), அம்மணிசத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா (60) ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர். 

இதில், தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா (52) என்பவர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே அனகப்பள்ளி பகுதியில் கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கை கடத்த திட்டமிட்டதும், இதற்கு, தனது நண்பரான அண்ணாதுரை (44) என்பவருக்கு சொந்தமான படகை ஏற்பாடு செய்திருந்ததும் தெரிய வந்தது. 

ஆந்திராவில் இருந்து  லாரி டிரைவர் பெரமராஜ் மூலம் டூல்ஸ் பாக்ஸ் என்பது போல ஒரு பெட்டியை உருவாக்கி அதை லாரியின் அடியில் பொருத்தி அதில் கஞ்சாவை பதுக்கி தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்கு வருவதற்காக லாரிக்கு கர்நாடக பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தியுள்ளனர். பிறகு, தமிழக எல்லையில் இருந்து சென்னை, விழுப்புரம் பகுதி வரை சென்னை பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தியுள்ளனர். லாரிக்கு பாதுகாப்பாக ஒரு சொகுசு காரும் வந்துள்ளது. 

பின்னர் திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு வரும் போது, லாரியின் உண்மையான பதிவெண் நம்பர் பிளேட்டை பயன்படுத்தி, பேராவூரணியில் வந்து கஞ்சாவை காரில் மாற்றி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து 330 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அண்ணாதுரைக்கு சொந்தமான 3 படகுகள்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கருப்பையா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., ஷனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி உள்ளிட்டோர் கஞ்சா கடத்தல் கும்பலிடம் பல பணி நேரம் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து தஞ்சாவூர் விளார் ரோடு கருப்பையா மற்றும் தஞ்சை அருகே புதுப்பட்டினம், தில்லைநகரில் உள்ள அவரது உறவினர் ரகுநாதன் ஆகியோர் வீடுகளில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பலமணிநேரம் நடந்த இந்த சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து ரூ.37.50 லட்சம் பணம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget