Crime: சிவகிரி அருகே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை
கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த செல்வக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவக்குமாரின் கால் மற்றும் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் செல்வகுமார் (33). இருவரும் நள்ளிரவில் அடிக்கடி மது அருந்தவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவக்குமார் நண்பர் செல்வகுமாரின் அண்ணன் மகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் லேசான தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றும் நள்ளிரவில் இருவரும் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது மது அருந்திக் கொண்டிருக்கும் போது சிவக்குமாரிடம் செல்வக்குமார் தனது அண்ணன் மகளை கேலி செய்தது குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் சிவக்குமார் மற்றும் செல்வக்குமாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக முற்றியுள்ளது. கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த செல்வக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவக்குமாரின் கால் மற்றும் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து உயிரிழந்த சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய சிவகிரி காவல்துறையினர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிவகிரி காவல்துறையினர் குற்றவாளி செல்வகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்