மேலும் அறிய

Tanjore: அம்மாவை வெட்ட வந்த தந்தை! குறுக்கே புகுந்து தந்தையை வெட்டிக்கொன்ற மகன்!

தன் தாயை வெட்ட தந்தை முயற்சிப்பதை கண்ட முதல் மகன் ஜீவா தனது நண்பர்கள் அந்தோணி ஆகாஷ், பெர்கின்ஸ் ஆகியோருடன் சேர்ந்து கரும்பாயிரத்தை அரிவாளால் கழுத்தில் வெட்டி சாய்த்துள்ளார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் முதல் மனைவியை பார்க்க வந்தவருடன் பிரச்னை செய்து மண்வெட்டியால் தாக்க முயன்ற தந்தையை தனது எதிர்காலம் குறித்து கூட யோசித்து பார்க்காமல் தாயை காப்பாற்ற தன் நண்பர்களுடன் சேர்ந்து  அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே குடும்பத் தகராறில் தாயை தாக்க வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன் உட்பட அவரது நண்பர்கள் என மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கரும்பாயிரம்‌ (46). இவர் திருப்பூரில் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு இரு மனைவிகள். இவர்களில் முதல் மனைவி ராதிகா (38). இவர் தனது மகன்கள் ஜீவா (23) (மீன் வெட்டும் தொழிலாளி). விக்ரம் (20). (ஷூக்கடை பணியாளர்.) ஆகியோருடன் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் இரண்டாவது மனைவி சிவசங்கரி (36) உடன் கரும்பாயிரம் வசித்து வந்தார். கரும்பாயிரத்தின் இரண்டாவது மனைவிக்கு இரு மகள்கள் உள்ளனர். இத்தனை ஆண்டுகளாக தனது முதல் மனைவி பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருந்துள்ளார் கரும்பாயிரம்.

Tanjore: அம்மாவை வெட்ட வந்த தந்தை! குறுக்கே புகுந்து தந்தையை வெட்டிக்கொன்ற மகன்!

ராதிகாவும் தன் மகன்களை சிரமப்பட்டு வளர்த்து வந்துள்ளார். இருவரும் தற்போது வேலைக்கு சென்று வருகின்றனர். இருவருக்கும் தங்களின் தாய் மீது அளவு கடந்த பிரியம் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு பிறகு ராதிகா வீட்டுக்கு கரும்பாயிரம் வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ளார். வெகு ஆண்டுகளுக்கு பின்னர் கணவர் வந்திருந்தாலும் அதை பெரிதும் ராதிகா பொருட்படுத்தவில்லையாம். வந்ததில் இருந்து ராதிகாவுடன் ஏதோ சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளார் கரும்பாயிரம். வெள்ளியன்று இரவு தொடர்ந்த சண்டை மறுநாள் சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்துள்ளது. இதில் ஒருகட்டத்தில் வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து ராதிகாவை வெட்ட கரும்பாயிரம் முயன்றுள்ளார். 

Tanjore: அம்மாவை வெட்ட வந்த தந்தை! குறுக்கே புகுந்து தந்தையை வெட்டிக்கொன்ற மகன்!

தன் தாயை வெட்ட தந்தை முயற்சிப்பதை கண்ட முதல் மகன் ஜீவா தனது நண்பர்கள் அந்தோணி ஆகாஷ், பெர்கின்ஸ் ஆகியோருடன் சேர்ந்து கரும்பாயிரத்தை அரிவாளால் கழுத்தில் வெட்டி சாய்த்துள்ளார். இதில் இதனால் பலத்த காயமடைந்த கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ராதிகா கடும் அதிர்ச்சியடைந்தார். தனது தாயை வெட்ட வந்த தந்தையை கொலை செய்த ஜீவா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கரும்பாயிரம் உடலை மீட்டு தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் த ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர்கள்  உமாசங்கர், ராஜேஷ் மற்றும் காவலர்கள் அருள்மொழிவர்மன் நவீன் ஸ்ரீஜித் மற்றும் அழகு சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை ஜீவா உட்பட மூன்று பேரையும் நாஞ்சிக்கோட்டை அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் 3 பேரையும் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உதவி ஆய்வாளர் அபிராமியிம் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Embed widget