‘19 வயதில் இந்தியா வந்தேன்’...இலங்கை தமிழர் தொடர் தற்கொலை முயற்சி - காரணம் என்ன..?
ராமநாதபுரம் மண்டபம் முகாமில் இருந்து தப்பிய ஜாய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனு கொடுத்து வந்து உள்ளார்
சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இலங்கை அகதி ஜாய் என்பவர் கண்ணாடியை உடைத்து எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் இருந்தவர் ஜாய். இவர் 19 வயதில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் ராமநாதபுரம் மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அங்கிருந்து தப்பிய ஜாய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கு உள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனு கொடுத்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். இவர் மீது வழக்குகள் உள்ள நிலையில் தன்னை தனது நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு கொடுக்க சென்றபோது அங்கு இருந்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்ப முடியாது வேண்டுமானால் வேறு ஒரு அதிகாரியிடம் தெரிவியுங்கள் என தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் ஜாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் உள்ள கண்ணாடியில் தனது தலையை முட்டினார். இதனால் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதைத் தொடர்ந்து அந்த கண்ணாடியை கையில் எடுத்து கழுத்தை அறுக்க முயன்றால் சுதாரித்துக் கொண்ட காவலர்கள் அப்போது அங்கு தடுத்த காவலர் சண்முகவேல் கையில் லேசான காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க காவல் துறை வாகனத்தில் கொண்டு சென்றனர். மேலும், ஜாய் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதைத் தொடர்ந்து அவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் ஜாயை அங்கிருந்து பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஜாய் கூறும் போது, "இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 19 வயதில் வந்தேன். எனது பெற்றோர் இலங்கையில் உயிரிழந்து விட்டனர். இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மண்டபம் முகாமில் இருந்து வெளியேறி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் அளித்தும் பயன் இல்லை. தற்போது நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் மனு அளிக்க வந்தேன்” எனத் தெரிவித்தார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)