மேலும் அறிய

Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!

உதயஸ்ரீ மற்றும் ராஜசேகர் இருவரும் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒன்றாக வாழ முடிவு செய்தனர். இந்த விஷயம் தோரபாபுவுக்கு தெரிய வரவும், அவர் தன் தாயுடன் வாக்குவாதம் செய்தார்

தெலங்கானா மாநிலத்தில் தகாத உறவு காரணமாக தனது தாயை கல்லூரி மாணவன் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் அம்மாநிலத்தின் ஹனுமக்கொண்டா  மாவட்டம், காசிப்பேட்டையில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பாலாஜி நகரில் உதய ஸ்ரீ என்ற 40 வயது கொண்ட பெண் ஒருவர் தனது கணவர், 20 வயதில் மகன், 18 வயதில் மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார். இதனிடையே நேற்று முன்தினம் தனது வீட்டில் உதய ஸ்ரீ கொலைச் செய்யப்பட்டு கிடந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காசிபேட் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதய ஸ்ரீ உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவக் குழு, தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்ததில் அவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதற்கும், கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டதற்கும் தடயங்கள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதலில் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடைபெற்றது. 

இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் உதயஸ்ரீ மகன் தோரபாபு தான் அம்மாவை கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவிக்க, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவனிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் இந்த கொலைக்கான காரணம் தெரிய வந்தது. அதாவது தன் குடும்பத்தோடு மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த உதயஸ்ரீ கடந்த சில மாதங்களாகவே எப்போதும் செல்போனில் மூழ்கியுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராஜசேகர் என்ற ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் நபர் அறிமுகமாகியுள்ளது. ஆரம்பத்தில் சகஜமாக பேச தொடங்கிய அவர்கள் ஒரு கட்டத்தில் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தனர். 

ராஜசேகருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனால் உதயஸ்ரீ மற்றும் ராஜசேகர் இருவரும் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒன்றாக வாழ முடிவு செய்தனர். இந்த விஷயம் தோரபாபுவுக்கு தெரிய வரவும், அவர் தன் தாயுடன் வாக்குவாதம் செய்தார். நீங்கள் செய்வது தவறு, அந்த உறவை கைவிடுங்கள் என எவ்வளவோ மன்றாடி கேட்டும் மகனின் பேச்சை உதயஸ்ரீ சட்டை செய்யவில்லை. இந்த நிலையில் தன் வாழ்க்கையை  விட தன் கௌரவமே முக்கியம் என்று நினைத்த தோரபாபு பொறுமையை இழந்து, தன் தாயைக் கொடூரமாகக் கொலை செய்தான். இரும்புக் கம்பியால் அடித்து, கத்தியால் கழுத்தில் குத்தினான். பின் கழுத்தை அறுத்த நிலையில் சம்பவ இடத்திலேயே உதயஸ்ரீ உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தோரபாபுவை கைது செய்த போலீசார், தலைமறைவான டெலிவரி நபர் ராஜசேகரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget