மேலும் அறிய

பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பி ரூ.15 லட்சம் இழந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி

புதுச்சேரி: பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பி ரூ.15 லட்சம் இழந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு பூபாலன் நகரை சேர்ந்தவர் உலக நாதன் . மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தற்போது புதுவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உலகநாதன் பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பினார். அதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய தள செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் இருந்த செல்போன் எண்ணில் உலக நாதன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஆன்லைன் வர்த்தக மேலாளர் மனோஜ் என்றும், பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும், இதில் முதலீடு செய்த பலர் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டார். 

இதனை உண்மை என்று நம்பிய, உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார். அடுத்த சில நாட்களில் அந்த செயலியின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உலகநாதன், மனோஜை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த உலகநாதன், இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர் குறித்து விசாரித்து வருகிறார்.

இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டால் தப்பிக்க முடியாது என சைபர்கிரைம்போலீசார் எச்சரிக்கை:

இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டால் தப்பிக்க முடியாது என சைபர்கிரைம்போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் புதுச்சேரியில் செயல்பட ஆரம்பித்ததில் இருந்து ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. மேலும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாராசைதன்யா அவர்களின் உத்தரவின் பேரில் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சைபர் கிரைம் போலீசார் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த மாதத்தில் மட்டும் பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது, பெண்களின் பெயரில் போலியாக வட்சப் அல்லது பேஸ்புக் அக்கவுண்ட்களை ஓபன் செய்து மற்றவர்களுடன் அவர்கள் பேசுவது போல் செய்திகள் அனுப்புவது, பெண்களுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது, பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அல்லது செய்திகளை அனுப்புவது, பெண்களின் அனுமதி இல்லாமல் அவர்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது, சமூக வலைதளங்களில் பெண்களுடைய கைபேசி எண்களை தவறாக சித்தரித்து பதிவிடுவது போன்ற ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு அரியாங்குப்பத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பெண்ணின் புகைப்படத்தை (morphing) தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டார் என்று பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் கடந்த மாதம் முதலியார் பேட்டை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தன்னுடைய  பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் உருவாக்கி அதில் என்னுடைய தனிப்பட்ட (private photos) புகைப்படங்களை பதிவிட்டு மேலும் நான் செய்தி அனுப்புவது போல் என் நண்பர்களுக்கு செய்தி அனுப்பி வருகின்றனர் என்ற புகாரின் பேரில் புதுச்சேரி இணையவழி காவல்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் மேல சொன்ன இன்ஸ்டாகிராம் உருவாக்கி அந்த பெண்ணினுடைய தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்ட புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த  மணிகண்டன்  (23)  என்பவரை கண்டுபிடித்து கைது செய்து மேற்கண்ட செயலை செய்ய பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து தலைமை கூட்டுறவில் நீதிபதி முன்பு ஆயப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது பற்றி மேலும்  தெரிவிக்கையில், பெரும்பாலான சமூக வலைதள குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் உறவினர்களால் அல்லது அவர்களுடைய மிக நெருங்கிய நபர்களால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ எடுக்கும் பொழுதோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது  எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தி உள்ளார். புதியதாக துவக்கப்பட்ட இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு விலை உயர்ந்த புதிய மென்பொருள்கள் (new upgraded software) மூலம் இது போன்ற அனைத்து விதமான குற்றங்கள் செய்தவர்களை கண்டுபிடித்து விட முடியும், மேலும் இது போன்ற குற்றங்கள் அனைத்துமே ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாக இருப்பதால், தவறான நடக்கவடிக்கைகள் ஈடுபடுவோர் தப்ப முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget