மேலும் அறிய

Crime: காரைக்குடி அருகே கல்லூரி மாணவி கொலை - காதலன் வெறிச்செயல்

தலையில் பலத்தகாயம்   ஏற்பட்டதால் சிறிது நேரத்திலே சினேகா சம்பவ இடத்திலே உயிரிழந்தார் சாக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த  மாத்தூர் வேல் முருகன் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வராஜ்.  கூலித் தொழிலாளியான இவரது இளைய மகள்  சினேகா வயது 21 நர்சிங் முடித்துவிட்டு அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  நேற்று மதியம் மாத்தூர் ரேஷன் கடை அருகே ஒரு இளம் பெண் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடுவதாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிய வர அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

 காவல்துறையும் ஊர் மக்களும் சேர்ந்து தலையில் பலத்த காயமடைந்த பெண்ணை பார்க்கும் பொழுது அது சினேகா என தெரிய வந்தது. விசாரணையில் சினேகாவுக்கும் அருகே உள்ள  இலுப்பகுடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி  கண்ணன் என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.  சினேகா அக்காவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதால் அக்கா திருமணம் முடிந்த பிறகு உங்கள்  திருமணம் நடத்தி வைக்கிறோம் என சினேகா வீட்டு தரப்பில் கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்க கோரி நேரடியாக வீட்டுக்கே வந்து கண்ணன் தகராறு செய்ததாகவும் இதில் சினேகா தாத்தாவை கண்ணன் தாக்கியதாக  கூறப்படுகிறது.

Crime: காரைக்குடி அருகே கல்லூரி மாணவி கொலை - காதலன் வெறிச்செயல்

இதிலிருந்து சினேகாவுக்கும் கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும்  சான்றிதழ்களை தருமாறு போனில் அழைத்துள்ளார். அந்த சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்டை  எடுத்துக்கொண்டு சினேகா தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மாத்தூர்ரேஷன் கடைக்கு வந்துள்ளதாகவும் அப்பொழுது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய  நிலையில் வண்டியில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சினேகாவின் தலை தலையில் ஓங்கி அடித்ததாகவும், சினேகாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வரும்பொழுது ஆள் வருவதை கண்ட கண்ணன் வண்டி எடுத்துக்கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது.  தலையில் பலத்தகாயம்   ஏற்பட்டதால் சிறிது நேரத்திலே சினேகா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget