மேலும் அறிய

"நான் அழகாக இல்லை” - உயிரை மாய்த்துக்கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவன்..!

குடும்பத்தினருடன் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் பூவேந்தனுக்கு, தான் அழகாக இல்லை என்ற வருத்தம் சிறு வயதில் இருந்தே ஏற்பட்டுள்ளது.

தான் அழகாக இல்லாத காரணத்தினால், இளம் பெண்கள் தன்னிடம் பேசுவதில்லை என்று தானாகவே நினைத்துக்கொண்டு, விரக்தியில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணப்பகுதியில்  பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மாவட்டம் சோழபுரத்திற்கு அடுத்த பணகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு பூவேந்தன் என்ற ஒரு மகனும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது குடும்பத்தில் பூவேந்தன் ஒரே மகன் என்பதால் ஆசையுடன் வளர்த்து வந்துள்ளனர். இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பத்தினருடன் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் பூவேந்தன் தான் அழகாக இல்லை என்ற வருத்தம்  சிறு வயதில் இருந்தே ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தாலும் டீனேஜ் வயதில் இது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.
 
தான் மாநிறமாக இல்லை, பார்ப்பதற்கு அழகாகவும் இல்லை என நினைத்து, தன்னிடம் இளம் வயது பெண்கள் யாரும் பேசாமல் செல்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. பூவேந்தனின்  மற்ற நண்பர்களுடன் சிரித்து பேசுகையில் ஏன் என்னிடம் பேசவிரும்புவதில்லை, அழகாக இல்லை என்பது தானோ என்ற தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்பட்டு விட்டார் இந்த மாணவன்.  ஒருவருக்கு வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால் எந்தச் செயலையும் செய்துமுடிக்க முடியாது, மேலும் சந்தோஷமாக வாழ முடியாமல் போய் விடும் என்ற கூற்று உண்மைதான் என்பதை இந்தச் சோகச் சம்பவம் காட்டியுள்ளது. 

அப்படித்தான் தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் பூவேந்தனின் முடிவு அமைந்துவிட்டது. அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து வந்திருந்த நிலையில், விரக்தியில் பணகுடம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில்  பூவேந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவனின் உடலை மீண்டு பிரதேசப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தன் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தியினை கேட்டப் பெற்றோர்கள் அலறி துடித்தனர். ஆசையாய் வளர்த்த என் செல்வத்தினை இழந்து விட்டோமே என்று பூவேந்தனின் உடலினைப்பார்த்து பெற்றோர்கள் கதறி அழுத நிகழ்வு பார்ப்போரையும் கண் கலங்க செய்தது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழபுரம் காவல்நிலைய போலீசார் என்ன காரணத்திற்காக மாணவர் உயிரிழந்திருப்பார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பூவேந்தனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வேறு எந்தப்பிரச்சனையும் அவனிடம் இல்லை எனவும் ஆனால் தான் அழகாக இல்லை என அடிக்கடி கூறுவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே  மன அழுத்தத்தின் காரணமாக மாணவன் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • தான் அழகாக இல்லை என்று 12 வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  அழகு என்பது அவரவர் கற்பனை என்றும், புறத்தோற்றத்தை விட குணம், படிப்பு போன்றவை முக்கியம் என்பதனை யாராவது உணர்த்தியிருந்தால், நிச்சயம் மாணவன் உயிரினை மாய்த்திருக்க மாட்டான் என்ற கருத்தினை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தை என்ன மனநிலையில் உள்ளார்கள்  என்பதை புரிந்துக்கொள்ள அவர்களுடன் நண்பர்களாய் பழகினால் நிச்சயம் இளம் வயது மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணமே வரவாய்ப்பில்லை என்பது தான் நிதர்சன உண்மை.

தலைப்பு செய்திகள்

DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Embed widget