மேலும் அறிய

வீடுபுகுந்து பாலியல் வன்கொடுமை: 102 சிசிடிவி; கிடைத்த சின்ன க்ளூ.. ரேப்பிஸ்ட்டுகளை தட்டித் தூக்கிய போலீஸ்..!

மும்பை தாராவியில் சிசிடிவி காட்சியில் கிடைத்த சிறிய க்ளூ மூலம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பை தாராவியில் சிசிடிவி காட்சியில் கிடைத்த சிறிய க்ளூ மூலம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இளம்பெண் ஒருவர் தன் திருமணத்திற்குப் பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாராவிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே 11ம் தேதியன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். விடியற்காலையில், அப்பெண்ணின் மாமனார் நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து சென்றுவிட்ட நிலையில் அந்த இளம்பெண் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, திறந்து கிடந்த வீட்டிற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள் அப்பெண்ணை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவும் எடுத்துள்ளனர். அப்பெண்ணின் மாமனார் வீடு திரும்பிய சமயத்தில் இருவரும் வீட்டிலிருந்து வெளியே ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையில் இளம்பெண் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த துணை கமிஷனர் ப்ரணாய் அஷோக், குற்றவாளிகளைப் பிடிக்க, காவல்துறை ஆய்வாளர் பல்வந்த் பாட்டில் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள 102 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் சரியான க்ளூ எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, அந்த தனிப்படையில் இருந்த காவலர் ஒருவர் சிசிடிவி காட்சிகளில் இருந்து ஒரு சிறிய க்ளூவை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த காட்சியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கடைக்காரர் ஒருவரிடம் கையை அசைத்துவிட்டுச் செல்கிறார்.

அந்த கடைக்காரரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, அந்த நபரின் பெயர் அனில் சவுகான் என்றும் ப்ரிண்ட்டருக்குத் தேவைப்படும் கலர் டோனரை தனது கடைக்கு சப்ளை செய்து வருபவர் என்றும் தகவல் அளித்துள்ளார். அனில் சவுகானை மடக்கிய காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். ஆரம்பத்தில் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் அனில் சவுகானின் மொபைல் லொகேஷன் மற்றும் பதிவான தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அவர் அப்பகுதியில் தான் இருந்தார் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர் காவல்துறையினரின் முறைப்படியான விசாரணையில் அந்த இளம்பெண்ணை தனது சகோதரர் நிலேசுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததை அனில் ஒப்புக்கொண்டார். 

அந்த பகுதியில் அந்த பெண் வசிப்பது குறித்து எப்படித் தெரியும் என்பது குறித்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, கடந்த சில ஆண்டுகள் முன்புவரை தாராவியில் குடும்பத்தினருடன் வசித்துவந்ததாகவும், சமீபத்தில் தான் விலி பார்லே பகுதிக்கு இடம்பெயர்ந்ததாகவும் அனில் சவுகான் கூறியுள்ளார். ஆனாலும், ப்ரிண்ட்டர் டோனர்கள் விநியோகத்திற்காக அடிக்கடி தாராவிக்கு அனில் சவுகான் வந்து சென்றுள்ளார். அப்படி தாராவிக்கு வந்து சென்றபோது அந்த இளம்பெண் மீது அனிலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய தனது சகோதரருடன் சேர்ந்து அனில் திட்டம் தீட்டி இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.


வீடுபுகுந்து பாலியல் வன்கொடுமை: 102 சிசிடிவி; கிடைத்த சின்ன க்ளூ.. ரேப்பிஸ்ட்டுகளை தட்டித் தூக்கிய போலீஸ்..!

இருவரும் இந்த இடத்திற்கு மட்டும் பழக்கமானவர்கள் இல்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கும் பழக்கமானவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் காவல்துறையினருக்குக் கிடைத்திருக்கிறது. அப்பெண்ணின் மாமியார் வெளியூருக்குச் சென்றிருப்பதையும், கணவரும், மாமனாரும் வெளியே சென்றுவிட்டால் அப்பெண் தனியாக இருப்பார் என்பதையும் இருவரும் தெரிந்து வைத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே இருவரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அப்பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்யலாம் என்ற நோக்கத்தில் வீடியோ எடுத்ததும் தெரிய வந்துள்ளது.

19 வயதான அனில் சவுகான் மற்றும் 20வயதான நிலேஷ் சவுகான் ஆகிய இருவர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மிரட்டுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
Embed widget