மேலும் அறிய

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விழுப்புரம்: பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம்: பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம், முத்தோப்பு கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது 55). பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகர துணை செயலாளர். இவருடைய அண்ணனான கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டை சேர்ந்த கமலக்கண்ணன் மகன் தொழிலாளி ஜெய்கணேஷ் (36) என்பவர் ரவியின் உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால் ரவிக்கும், ஜெய்கணேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 30.1.2021 அன்று பகல் 12.05 மணியளவில் ரவி தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு மாடுகளை ஓட்டியபடி சென்று கொண்டிருந்தார்.

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அப்போது அங்கு வந்த ஜெய்கணேஷ், முன்விரோதம் காரணமாக தனது சித்தப்பா என்றும் பாராமல் ரவியை தகாத வார்த்தையால் திட்டியதோடு தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கத்தியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ரவி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்கணேசை கைது செய்தனர்.

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட ஜெய்கணேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்கணேஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜரானார். பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது தற்போது பரபரப்பாகியுள்ளது.

ஆப் மூலம் கடன்; ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - கண்ணீருடன் அரசுக்கு பெண் கோரிக்கை

மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?

Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget