மேலும் அறிய
Advertisement
சசிகலாவின் ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்... பினாமி சொத்துக்களுக்கு ஆபத்து!
2017-ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது, அதில் கண்டறியப்பட்ட பினாமி சொத்துகள் முடக்கப்பட்டு வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தோல்வி அடைந்து, திமுக ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை மீண்டும் மறு விசாரணை நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீண்டும் முதலில் இருந்து தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கற்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகே பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட, சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது.
அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. முடக்கப்பட்ட இடத்தில் யாரும் நுழையவோ, விற்கவோ வருமான வரித்துறை தடை விதித்துள்ளது. மேலும், சசிகலா, தீபக், தீபா ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவை பினாமி சொத்துகள் இல்லை என்பதை நிரூபிக்க 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலா சொத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 1600 கோடி ரூபாய் அளவிற்கு பினாமி சொத்துக்கள் கடந்த 201 9ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. அதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துகள் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை முடக்கப்பட்ட பினாமி சொத்துகளின் மதிப்பு சுமார் 2000 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது சென்னை அடுத்துள்ள பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது. பையனூர் பங்களாவை பொறுத்தவரை இசையமைப்பாளர் ஒருவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக சசிகலா மிரட்டி பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சொத்து தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவை பினாமி சொத்துக்கள் என்று கண்டறியப்பட்ட, பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இது மட்டும் இன்றி இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் வரை பினாமி சொத்துகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்பொழுது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து , மேலும் பல பினாமி சொத்துகள் முடக்க படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை தற்பொழுது வருமான துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
இரு பெண்களை காதலித்த காதலன்: டாஸ் போட்டு ஒருவரை தேர்வு செய்த கிராம பஞ்சாயத்து!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion