மேலும் அறிய

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராளியான ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திடீர் தற்கொலை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகனாபுரம் கிராம துணை தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி, 5700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தொடரும் போராட்டம்

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பதால் பரந்தூர், நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாம்புரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளும் அகற்றப்பட உள்ளதால் அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ஏகனாம்புரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் போராட்டம் 848 வது நாளை எட்டி உள்ளது.

அவ்வப்போது வாக்குவாதம்

தற்போது நிலம் அளவிடும் பணியினை பொதுப்பணி துறை துவங்கியதை தொடர்ந்து, நெல்வாய் ஊராட்சியில் வீடுகளை அளவிடும் பணிக்கு வருவாய் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வந்தபோது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஒருபுறம் அரசு தனது விமான நிலைய பணிகளை தொடர்ந்தாலும், பொதுமக்கள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள் ‌‌. 

இந்த போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கணபதி. இவரது மனைவி திவ்யா (35). இவர் ஏகாம்பரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி அளித்தவர். திவ்யாவும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்ற உதவியாக இருந்தவர். இந்நிலையில் திங்கள்கிழமை திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏற்கெனவே உடல் நலம் குன்றி இருந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. குடும்ப பிரச்சனை காரணமாகவே இந்த தற்கொலை நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை அறிக்கை என்ன ?

திவ்யா(35) க/பெ.கணபதி, கீரநல்லூர் கிராமம் என்பவர் இறந்தது சம்மந்தமாக, வாதி கௌசல்யா(3) க.பெ.சேகர், பிள்ளையார் கோயில் தெரு. கீரநல்லூர் கிராமம் என்பவரின் சகோதரியான திவ்யா என்பவருக்கு கடந்த 15 வருடஙகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் திவ்யா ஏகனாபுரம் கிராமத்தின் துணை பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்ததாகவும், இவரது கணவர் கணபதி விவசாய வேலை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், இந்நிலையில் 18.11.2024 அன்று காலை 08.30 மணியளவில் திவ்யாவின் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றதாகவும் பின்னர் 10.00 மணியளவில் அவரது கணவர் வேலை சம்மந்தமாக காஞ்சிபுரம் சென்றதாகவும் திவ்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். பின்னர் 15.45 மணியளவில் கணபதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது திவ்யா வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இருந்ததாக புகார். இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் : 104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget