Crime: குடிக்காதடா தம்பி... கெஞ்சிக்கேட்ட அக்காவை சுட்டுக்கொன்ற தம்பி.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்..
சொந்த அக்காவை குடி போதையில் தம்பி சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது பழக்கம் பலரை கேட்ட வழியில் கொண்டு செல்லும் என்பதற்கு பல சம்பவங்கள் சான்றாக அமைந்துள்ளன. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த முறை மது குடிப்பதை கண்டித்த அக்காவை தம்பி சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவிற்கு அருகே உள்ள ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரஜ்(18). இந்த இளைஞர் நீண்ட நாட்களுக்காக மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதன்காரணமாக இவருக்கும் இவருடைய சகோதரி ருச்சி(32) என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுரஜ் மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது அவருடைய சகோதரி ருச்சி மீண்டும் அதை கண்டித்துள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் சுரஜ் தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை வைத்து அவர் தன்னுடைய சகோதரி ருச்சியை சுட்டு கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ருச்சியின் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ருச்சியை சுரஜ் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அத்துடன் சுரேஜ் இந்த கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய மது பழக்கம் தொடர்பாக பல நாட்களாக சகோதரி ருச்சி கண்டித்து வந்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் கண்டித்தப்போது ஆத்திரம் அடைந்த சுரஜ் தன்னுடைய சகோதரியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மது பழக்கத்தால் ஒருவர் தன்னுடைய சொந்த சகோதரியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: பெண்கள் பள்ளிக்கு பின்னால் சடலம்! வயிறு கிழிக்கப்பட்டு சிறுவன் கொடூர கொலை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்