மேலும் அறிய

சமையல் கற்றுக்கொள்... கண்டித்த தாய்...இளம்பெண் விபரீத முடிவு - நெல்லையில் சோகம்

திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் திருமணம் முடிந்து சென்றால் அங்கு வேலைகளை பார்க்க வேண்டும். அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக் கொள் என  தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள கீழகோடன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி கனகமணி. இவர்களுக்கு 2 மகன்களும், கிறிஸ்டில்லாமேரி (வயது 19) என்ற மகளும் உள்ளனர். இவர்களின் தந்தை குப்புராஜ் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் தாய் கனகமணி மூவரையும் வளர்த்து வந்தார். இந்த சூழலில் மகள் கிறிஸ்டில்லா மேரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருகிற 1-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் தீவிரமாக செய்து வந்தனர். இந்த நிலையில்  கிறிஸ்டில்லா மேரி அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் அதிக நேரத்தை அதிலேயே செலவழிப்பதாக தாய் கண்டித்து உள்ளார். மேலும் செல்போனை வைத்து கொண்டு வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருப்பதாகவும் தாய் கூறி உள்ளார். 

திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் திருமணம் முடிந்து சென்றால் அங்கு வேலைகளை பார்க்க வேண்டும். அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக் கொள் என  தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. தாய் கண்டித்ததால் மனமுடைந்த கிறிஸ்டில்லா மேரி  வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக தெரிகிறது, இதில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது விஷமருந்தி மயக்கமடைந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்டில்லாமேரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்,  திருமணம் நிச்சயிக்கப்பட்ட  நிலையில் தாயின் கண்டிப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget