மேலும் அறிய
Advertisement
நாகை: மது போதையில் ரகளை; எதிர் வீட்டுக்காரரின் கழுத்தை அறுத்து கொன்ற குடும்பம் கைது
நாகை அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர் கழுத்து அறுத்து படுகொலை. எதிர் வீட்டுக்காரரை படுகொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது.
நாகை அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். எதிர் வீட்டுக்காரரை படுகொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி மகன்களுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே நேற்று மதுபோதையில் இரவு நேரத்தில் ரகளையில் ஈடுபட்ட நரசிங்கமூர்த்தியை தினமும் ஏன் தகராறு செய்கிறாய் என்று அருகில் வசிக்கும் பரமசிவம் மற்றும் அவருடைய மனைவி மகன் ஆகியோர் கேட்டுள்ளனர். அப்போது நரசிம்மமூர்த்திக்கும், பரமசிவத்திற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவன் அவரது மனைவி பாக்கியவதி மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து நரசிங்க மூர்த்தியை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நரசிம்மமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபரை ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மகன் ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion