மேலும் அறிய

Crime: ஒரே நிலத்தை 2 பேருக்கு விற்ற மைனா பட தயாரிப்பாளர் - உள்ளே தள்ளிய போலீஸ்..!

ஒரே நிலத்தை 2 பேருக்கு விற்ற மோசடி புகாரில் மைனா பட தயாரிப்பாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2010ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் மைனா. பிரபு சாலமன் இயக்கிய இந்த படத்தில் விதார்த், அமலாபால் நடித்திருந்தனர். இந்த படத்தை ஜான் மேக்ஸ் என்பவர் தயாரித்திருந்தார். அதன்பின்பு, அவர் பட தயாரிப்பில் ஈடுபடவில்லை.

மைனா பட தயாரிப்பாளர்:

ஜான் மேக்ஸின் முழு பெயர் ஜான் ஜின்னி மேக்ஸ்.  53 வயதான அவர் சென்னை, விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். மைனா படத்திற்கு பிறகு ரியஸ் எஸ்டேட் வியாபாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜான் மேக்ஸ் மீது மோகனவேல் பண மோசடி புகார் அளித்தார். இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் சங்கரின் உத்தரவின்படி, கூடுதல் துணை ஆணையர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டர்.

மோசடி:

விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. திருவள்ளூரை அடுத்த மணவாளநகரைச் சேர்ந்தவர் மோகனவேல் ( அவருக்கு வயது 56) இவர் விவசாயி ஆவார். ரியல் எஸ்டேட் அதிபராக உலா வந்த ஜான் மேக்ஸ் கடந்த 2018ம் ஆண்டு வேப்பம்பட்டு ரேவதி நகரில் உள்ள 1905 சதுர அடி அளவிலான இடத்தை மோகனவேலுக்கு ரூபாய் 9 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர், அந்த நிலத்திற்கான அசல் பத்திரத்தையும் மோகனவேலிடம் கொடுத்து அவரது பெயருக்கு அனைத்து ஆவணங்களையும் மாற்றினார்.

இந்த நிலையில், திடீரென மீண்டும் மோகனவேலை ஜான் மேக்ஸ் நேரில் சந்தித்துள்ளார். அப்போது, தான் விற்ற நிலத்தில் வில்லங்கம் இருப்பதாகவும், அதனை தானே சரி செய்து தருவதாகவும் அதற்காக அசல் பத்திரத்தை தருமாறும் கேட்டுள்ளார். ஜான் மேக்ஸ் வார்த்தையை நம்பிய மோகனவேல் பத்திரத்தை அளித்துள்ளார்.

கைது:

அவரிடம் இருந்து பத்திரத்தை வாங்கிச் சென்ற ஜான் மேக்ஸ், மோகனவேலுக்கே தெரியாமல் அந்த இடத்தின் பொது அதிகாரத்தை தமிழ்ச்செல்வன் என்பவர் பெயருக்கு மாற்றியுள்ளார். பின்னர், அந்த பத்திரத்தை வைத்துக்கொண்டு அந்த நிலத்தை ஐதரபாத்தைச் சேர்ந்த சுரேஷ்கிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர், இதையறிந்த மோகனவேல் பதறியுள்ளார். உடனே, ஜான் மேக்சை சந்தித்து இதுகுறித்து கேட்டுள்ளார். மேலும், தன்னுடைய 9 லட்சம் பணத்தையும் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், ஜான் மேக்ஸ் பணத்தை திருப்பித் தராமல் மோகனவேலை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஜான் மேக்ஸ்  ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஜான் மேக்ஸ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை நேற்று மாலை கைது செய்தனர்.

மைனா பட தயாரிப்பாளர் நில மோசடியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime: திண்டுக்கல் அருகே பயங்கரம்; வெட்டி முகத்தை சிதைத்து ரவுடி கொடூர கொலை

மேலும் படிக்க: ரொம்ப அசிங்கமா போச்சி குமாரு! திருட வந்த வீட்டில் எதுவும் சிக்காததால் ரூ. 500 நோட்டை போட்டுச் சென்ற திருடர்கள்..

 

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget