மராத்தி நடிகையிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் திருடர்கள்: ரூ.1.48 லட்சம் அபேஸ்
மராத்தி நடிகையிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் திருடர்கள் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.48 லட்சம் பணத்தை அபேஸ் செய்துள்ளனர்.
மராத்தி நடிகையிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் திருடர்கள் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.48 லட்சம் பணத்தை அபேஸ் செய்துள்ளனர்.
மும்பையின் வில்லா பார்லே பகுதியில் வசிக்கும் அந்த அந்த நடிகைக்கு இப்போது 64 வயதாகிறது. இந்நிலையில் அவரது கணவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஏர்டெல் என்ற தலைப்பில் தகவல் இருந்துள்ளது. Know Your Customer (KYC) கேஒய்சி தகவல்கள் வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கிறது. உடனே அந்தப் பெண் கணவருக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு மொபைலில் கோரப்ப்பட்டபடி Know Your Customer (KYC) கேஒய்சி தகவல்களை ஒன்றுவிடாமல் முழுமையாகக் கொடுத்துள்ளார்.
பின்னர் மறுமுனையிலிருந்து குவிக் சப்போர்ட் அப்ளிகேஷன் என்றொரு செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறியுள்ளனர். இந்தச் செயலி மூன்றாம் நபர் நமது செல்போனுக்குள் ஊடுருவச் செய்யும். இதை அறியாமல் அந்தப் பெண்ணும் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர், அவரிடம் Know Your Customer (KYC) கேஒய்சி தகவல்கள் புதுப்பித்தல் கட்டணமாக ரூ.10 அனுப்பச் சொல்லியுள்ளனர். அந்தப் பெண்ணும் அதை நெட் பேங்கிக் மூலம் அனுப்பியுள்ளார்.
உடனே அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கு தகவல்களை அவர்கள் திருடிக் கொண்டனர். இதை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் எதற்கும் பரிசோதித்துக் கொள்வோம் என்றெண்ணி அந்தப் பெண் அருகிலிருந்த ஏர்டெல் கடைக்குச் சென்று சோதனை நடத்தினார். அப்போது அவர்கள் நாங்கள் அப்படி ஏதும் அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து, அப்பெண் தனது வங்கிக்கு அழைத்து கணக்கை முடக்கிவைக்கச் சொல்ல முற்பட்டார். ஆனால் திருடர்கள் அதற்குள் ஜாக்கிரதையாக ரூ.1.48 லட்சம் பணத்தை சுருட்டிக் கொண்டனர்.
இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் இருந்து தப்பிப்பதற்கு, இணைய குற்றவாளிகள் அனுப்பும் போலியான வேலை வழங்கு மின்னஞ்சல் (பொதுவாக அதிகார பூர்வ மின்னஞ்சல் தவிர்த்து)/ குறுஞ்செய்திகளில் எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கண பிழைகள் காணப்படும். மேலும் இதுபோன்ற மொத்தமாக அனுப்பப்படுவதால் இம்மின்னஞ்சல்கள் உங்களது ஸ்பேம் பகுதியில் காணப்படும். ஒருபோதும் இதுப்போன்ற மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.
தனிப்பட்ட தகவல்களைப் பகிர்தல் தொடங்கி வாடிக்கையாளர்களின் மிகச் சிறிய தவறுகள் கூட வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைத் திருடப் பயன்படும் என்பதை ஒருபோதும் சாமான்ய மக்கள் மறந்துவிட வேண்டாம்.
எப்போதும். யாருக்கும் உங்களது தனிப்பட்ட தகவல்கள் அல்லது நிதிச்சார்ந்த தகவல்களை மின்னஞ்சல்¸ குறுஞ்செய்தி அல்லது தொலைப்பேசியின் வாயிலாக பகிர வேண்டாம். மேற்சொன்ன மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் பின்வரும் https://cybercrime.gov.in என்ற இணைதளத்தில் புகார் அளிக்கவும்.