மேலும் அறிய

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தூக்கிட்டு தற்கொலை! கடன் பிரச்சனையால் விபரீதம்..

சீர்காழியில் கடன் பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை கொன்று, தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி என்.எஸ்.பி நகரில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடி இருந்து வருபவர் 34 வயதான கார்த்திக். லாரி ஓட்டுநரான கார்த்திக், அவரது 21 வயது மனைவி பாரதி, 3 வயது மகன் கெளசிக் மற்றும் 8 மாத பெண்  குழந்தை பவதாரணி  ஆகியோருடன்  வசித்து வந்துள்ளனர்.


சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தூக்கிட்டு தற்கொலை! கடன் பிரச்சனையால் விபரீதம்..

இந்நிலையில் இன்று மதியம்  பாரதி தனது தாயாருக்கு போன் செய்து தான் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள  போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பதறி போய் அவரது தாயார் சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி கிராமத்தில் இருந்து  வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு குழந்தைகளையும் வீட்டில் உள்ள அறையில் தூக்கிலிட்டு, வீட்டின் வராண்டாவில் பாரதியும் தூக்கில் தொங்கியுள்ளார். இதனை  கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 



சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தூக்கிட்டு தற்கொலை! கடன் பிரச்சனையால் விபரீதம்..

மேலும் இது குறித்து அக்கம் பக்கத்து வீட்டார், சீர்காழி காவல் நிலையத்திற்கு  தகவல் அளித்ததின் பேரில் சீர்காழி காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து பாரதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின்  உள்ளிட்ட 3 பேரின் உடலையும் கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தூக்கிட்டு தற்கொலை! கடன் பிரச்சனையால் விபரீதம்..

தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் நடத்திய  முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக பாரதி எழுதிய வைத்துள்ள கடித்தின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. மேலும் பாரதியின் கணவர் கார்த்திக் சென்னையில் ஓட்டுநராக பணியில் உள்ள நிலையில் இன்று பணி நிமித்தமாக வெளிமாநிலத்தில் சென்று உள்ள நேரத்தில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்த்திக் மற்றும் பாரதி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தூக்கிட்டு தற்கொலை! கடன் பிரச்சனையால் விபரீதம்..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 - 24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டுமெனவும், இல்லையெனில் இதுபோன்ற விபரீத நிகழ்வுகள் நடைப்பெற்று, பலரது வாழ்க்கை பாழாகிறது என பல சமூக ஆர்வலர்கள்  தொடர்ந்து தெரிவிக்கிறார்கள். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Embed widget