ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக மீனவர் தீக்குளிக்க முயற்சி - மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
தன் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக கூறி மீனவர் ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் 54 வயதான செண்பகசாமி. இவர் நாம் தமிழர் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் பழையார் மீனவ கிராமத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா தொடர்பாக செண்பகசாமிக்கும், மீனவ பஞ்சாயத்தாருக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரச்னை எழுந்துள்ளது. இதனால் செண்பகசாமி குடும்பத்தினரை ஊர்பஞ்சாயத்தில் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செண்பகசாமிக்கு ஆதரவாக நாம் தமிழன் கட்சியினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு வந்த செண்பகசாமி, தன்னை குடும்பத்தோடு ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர் என்றும்,
இதனால் தனது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லை எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஊர்விலகளை நீங்கி எனது குடும்பத்தாரை கண்டுபிடித்துத்தர வேண்டுமென்று கூறி கூறைத்தீர் கூட்ட அரங்கு முன்பு செண்பகசாமி தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றிக்கொண்டு தீக்களிக்க முயன்றார். இதனைக் கண்ட அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய்யை தட்டிவிட்டு அவரை மீட்டனர்.
North Korea : 48 மணிநேரத்தில்... இரண்டு ஏவுகணைகள்... பதறவைக்கும் வடகொரியா: பீதியில் உலக நாடுகள்..!
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் அவரை காவல்துறையினர் அழைத்து சென்றனர், மனு வாங்கி குறைகளை கேட்டறிந்த ஆட்சியர் மகாபாரதி உடனடியாக காவல்துறையிரிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடன் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைக்காக செண்பகசாமியை காவல்நிலையம் அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.