மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் ஆண், பெண் காவலர்கள் உல்லாசம் - எஸ்பி அதிரடி நடவடிக்கை
ஆண், பெண் இரண்டு காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிமையில் இருப்பதாக தகவல் கிடைத்ததுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நள்ளிரவில் பூட்டிய அறைக்குள் இருந்த ஆண், பெண் காவலர்கள் இருவரை பணியிடம் நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிகமாக மயிலாடுதுறை காவிரி நகரை அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்கள், காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் தலைமை அலுவலமாகவும், பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைக்கும் இடமாகவும் இந்த அலுவலகம் திகழ்ந்தது வருகிறது. இதில் ஆண், பெண் இருபால் காவலர்களும் பணியாற்றி வருகின்றனர். இளம் வயது முதல் ஓய்வு பெற போகும் வயது வரை உள்ள காவலர்களும் பணியில் உள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவருக்கு ஆண், பெண் இரண்டு காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிமையில் இருப்பதாக தகவல் கிடைத்ததுள்ளது. இதனை கேட்ட அதிர்ந்து போன அவர் அவசர அவசரமாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
Whatsapp Feature: செம்ம! வாட்ஸ் அப்பில் ஏஐ சாட்பாட்! மெட்டா நிறுவனம் அதிரடி - எப்படி செயல்படும்?
அப்போது அலுவலகத்தில் ஒரு ஏசி அறையில் மட்டும் உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. திடுக்கிட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அதன் கதவை தட்டியுள்ளார். அப்போது யாரும் திறக்கவில்லை. இதனை அடுத்து மீண்டும் பலமாக தட்டிய போது உள்ளிருந்து ஆண், பெண் காவலர்கள் இருவர் வெளியே வந்துள்ளனர். இதை கண்டு அதிர்ந்து போன காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை செய்ததில், ஆண் காவலர் அதே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்றும், அந்த பெண் காவலர் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் காவல் நிலையத்தை சேர்ந்தவர் என்றும், இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என தெரியவந்தது. பின்னர் காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இது குறித்து அறிக்கை அளித்தார்.
தொடர்ந்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இருவரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் விசாரணை செய்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். டிசிப்ளினரி டிபார்ட்மெண்ட் ஆக உள்ள காவல்துறையில் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் கோயிலாக கருதப்படும் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு காவலர்கள் நடந்து கொண்ட இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும், இதனை அறிந்து உடனடியாக அவர்களுக்கு தண்டனை அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.