ஆசிரியரிடம் மிளகாய் பொடியை தூவி செயின் பறிப்பு - இளைஞர்களை தட்டி தூக்கிய காவல்துறை
மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியையின் செயினை பறித்த இளைஞர்கள் இருவரை மணல்மேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியையின் செயினை பறித்த இளைஞர்கள் இருவரை மணல்மேடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து பணிபுரியும் ஆசிரியை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆசிரியர் ஆலிஸ்மேரி. மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். அதுபோல கடந்த நவம்பர் 11 -ஆம் தேதி தனது தங்கை மகனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார்.
Gym Owner Death: அதிர்ச்சி... அதிக நேரம் உடற்பயிற்சி... ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த கதி
மிளகாய் பொடிதூவி செயின் பறிப்பு
அப்போது மணல்மேடு அருகே ஆலிஸ்மேரி வந்த வாகனத்தை வழிமறித்த ஒரு அடையாளம் தெரியாத கும்பல், மிளகாய் பொடியை அவர்கள் மீது தூவி ஆலிஸ்மேரி அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக ஆலிஸ்மேரி மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட மணல்மேடு காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Upcoming Movies : அமரன் , கங்குவா போதும்பா... நவம்பர் மாதம் இன்னும் இத்தனை படங்கள் வருது
குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீஸார்
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார், செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் இருந்த, சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் சிக்னலை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், சந்தேகத்தின் அடிப்படையில் சி.புலியூரை சேர்ந்த பழனி என்பவரது மகன் 28 வயதான விவேகானந்தன் 28. புரசங்காடு கலியமூர்த்தி என்பவரது மகன் 22 வயதான பிருதிவிராஜ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது ஏன்..? - அழகாபுரம் தங்கதுரை கொடுத்த விளக்கம்
மேலும் சிலருக்கு வலைவீச்சு
விசாரணையில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய விவேகானந்தன் கடந்த சில நாட்களாக ஆலிஸ்மேரியை கண்காணித்து தனது சிறை நண்பர்களுடன் சேர்ந்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும், நகையைத் திருடி உடன் வந்த நண்பர்களிடம் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது. இதனை அடுத்து விவேகானந்தன், பிரிதிவிராஜ் இருவரையும் மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து மயிலாடுதுறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
மயிலாடுதுறை காவல் சரக்கு உட்பட்ட கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீசார், தீவிரமாக செயல்பட்டு பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து பிடித்து பொருட்களை மீட்டு குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தந்து, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக்கு இடமானவராக திகழ்ந்து வருவது இருப்பிடத்தக்கது.