மேலும் அறிய

எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் உயிருக்கு போராடி வருகிறார். உடல் அருந்திய மூன்றாவது நபர் மாயமான நிலையில், அவரை தேடி வருகின்றனர்.

ஒரகடம் அருகே போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வந்ததன் விளைவாக கடுமையான ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது .அதேபோல தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது . கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமையின் தளர்வில் கூட டாஸ்மார்க் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை . இதன் எதிரொலியாக மது குடிப்போர் மது கிடைக்காமல் கள் அல்லது கள்ளச்சாராயம் அல்லது போலி மது ஆகியவற்றை வாங்கி பருகுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் . தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய  பலர் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற  வருகிறது.  போதைக்காக சிலர் சில சமயங்களில் ஆதாரமற்ற முயற்சிகளை மேற்கொண்டு அதனால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதனால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார். 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இந்நிலையில் நேற்று போதைக்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன்,சுரேஷ், கிருஷ்ணன் ஆகிய நபர்களுடன் இணைந்து கூட்டாக எலுமிச்சை பழம் சாறு பிழிந்து தின்னர் என்னும் ரசாயனத்தை குடித்து உள்ளனர். இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் ஷங்கரின் நண்பர்களான கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிவசங்கர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே சுரேஷ் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இதுகுறித்து அரசு மனநல மருத்துவரிடம் கேட்டபோது , ‛மது குடிப்போர் ஊரடங்கின் பொழுது மதுவைப் பற்றி நினைக்காமல் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்தல் மற்றும் தியானம் செய்தல் ஆகியவற்றை மூலமாக மதுவை மறப்பதற்கு இந்த ஊரடங்கை  பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் 24 மணி நேரம் மனநல மருத்துவர்கள் மூலம் மது குடிப்போர் அதிலிருந்து மீள்வதற்கு வழி வழிமுறைகளை செல்போன் மூலமாக பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது,’’ என 
தெரிவித்தார்.
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
மேலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 7200953536 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மதுவிலிருந்து விடுபடம் வழிகளை கேட்டறியலாம். என்றும் தெரிவித்தார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?

விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?

Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!

Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!

கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR

Embed widget