(Source: ECI/ABP News/ABP Majha)
28 ஆண்டுகளுக்கு முன் குற்றம்செய்தவரை மாறு வேடங்களில் சென்று கைது செய்த மும்பை போலீஸார்.. நடந்தது என்ன?
1993ம் ஆண்டு பெண் ஒருவரை கடுமையாகத் தாக்கிய 57 வயது நபரை பிடிக்க மும்பை சம்தா நகர் காவல் துறையினர் பால்காரராக, காய்கறி விற்பவராக என பல வேடங்களில் சென்று அவரை கைது செய்துள்ளனர்.
1993ம் ஆண்டு பெண் ஒருவரை கடுமையாகத் தாக்கிய 57 வயது நபரை பிடிக்க மும்பை சம்தா நகர் காவல் துறையினர் பால்காரராக, காய்கறி விற்பவராக என பல வேடங்களில் சென்று அவரை கைது செய்துள்ளனர்.
மும்பை சம்தா நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை போலீஸார் தூசி தட்டினர். அப்போது பெண் ஒருவரை கடுமையாகத் தாக்கிய ரமா சங்கர் கலே என்பவர் தலைமறைவாகியிருந்தது தொடர்பான வழக்கு போலீஸார் கண்களில் பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க போலீஸார் சினிமா பட பாணியில் திட்டமிட்டனர். பால்காரராக, காய்கறி விற்பவராக, கொரியர் விநியோகம் செய்பவர்களாக என பல்வேறு வேடங்களில் போலீஸார் குற்றம் செய்த நபரை தேடினர். இறுதியில் கலேவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
1993 இல் கத்தி மற்றும் இரும்புக் கம்பி கொண்டு பெண் ஒருவரை கலே கடுமையாகத் தாக்கினர். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. கன்டவி கிழக்கு பகுதியில் 2 குழுக்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் பெண் ஒருவரை ஆட்டோ ஓட்டுநராக இருந்த கலே தாக்கினார்.
இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இவர் தலைமறைவாகிவிட்டார். கன்டிவ்லி பகுதியில் கலே இருப்பது குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரை தேடும் பணிகள் நடைபெற்றன. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டது. கொரியர் விநியோகம் செய்பவர் போலவும், போஸ்ட் மேன் போலவும் வேடமிட்டு வீடுதோறும் சென்று கலோ இருக்கிறாரா என்று பார்த்தோம். அனைத்து வீடுகளிலும் புகைப்படம் எடுத்து தகவல்களை சேகரித்தோம்.
அரசு அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.. நடந்தது என்ன?
கலே பற்றி தெரிந்து கொள்ள மார்கெட்டிலும் தேநீர் கடைகளிலும் விசாரித்தோம். பின்னர் சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு முதல் தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். தற்போது அவர் குற்றம் செய்யாதவர் போல் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் தின்தோஷி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். கலேவின் மகனும் சட்டம் படித்துவருகிறார். உரிய ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Crime : வயலுக்குச் சென்ற 2 பெண்கள் வெட்டிக்கொலை...! அரியலூரில் கொடூரம்..
இத்தனை ஆண்டுகளாக மகாராஷ்டிரத்தின் பல்வேறு நகரங்களில் அவர் வாழ்ந்து வந்தார். தற்போது சிறப்பு குழு அமைக்கப்பட்டதை அடுத்து அவர் பிடிபட்டுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இத்தனை ஆண்டுகளாக முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்த வழக்கை மகாராஷ்டிர காவல் துறையினர் முடித்து வைத்துள்ளனர். இதனால், காவல் துறையினருக்கு பாராட்டுகள் பெருகி வருகிறது.