மேலும் அறிய
பெண் மருத்துவர் ஜிம்மில் உடற்பயிற்சியை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர் - சிக்கியது எப்படி?
ஜிம்மில் உடற்பயிற்சியை செய்வதை திருட்டுதனமாக வீடியோ எடுத்த இளைஞரை தட்டிகேட்ட பெண் மருத்துவர்
ஜிம் - கோப்புப்படம்
Source : ABPLIVE AI
பெண் மருத்துவரை ஆபாசமாக திட்டி, தாக்க முயன்றதாக இளைஞர் மீது ஜிம் நிர்வாகம் அளித்த புகாரின் கீழ் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செல்போனில் உள்ள வீடியோக்கள் குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெண் மருத்துவரை வீடியோ எடுத்த இளைஞர்
மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கு சொந்தமான போனிக்ஸ் என்ற உடற்பயிற்சிகூடம் (ஜிம்) கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. உரிமையாளர் வசந்தகுமார் கேரளாவில் உள்ள நிலையில் அவரது சகோதரர் கார்த்திகேயன் என்பவர் பராமரித்து வருகின்றார். இங்கு 250க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போனிக்ஸ் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9ஆம் தேதி பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அதே ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த புதூர் கொடிக்குளம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (24) என்ற இளைஞரும் உடற்பயிற்சி செய்துகொண்டே தனது செல்போனில் வீடியோ பதிவுசெய்துள்ளார்.
மன்னிப்புக் கோரிய இளைஞர்
அப்போது பெண் மருத்துவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நிலையில் அந்த காட்சியையும் அவருக்கு தெரியாமலயே வீடியோவில் பதிவு செய்வதை பார்த்த பெண் மருத்துவர் சிலம்பரசனிடம் சென்று தட்டிகேட்டுள்ளார். அப்போது சிலம்பரசன் அவர்களுடன் வாக்குவாதம் செய்து பெண் மருத்துவரை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். பின்னர் உடற்பயிற்சி மையத்தில் இருந்த CCTV கேமராவை ஆய்வு செய்த போது சிலம்பரசன் செல்போன் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் சிலம்பரசன் பெண் மருத்துவரிடம் தான் செல்போனில் வீடியோ எடுத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரிய நிலையில் பெண் மருத்துவர் புகார் அளிக்க விருப்பமில்லை என கூறிவிட்டு சென்றுள்ளார்.
செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால் உடற்பயிற்சி கூடத்தில் பெண் மருத்துவர் உடற்பயிற்சி செய்ததை திருட்டுத் தனமாக வீடியோ எடுத்து அதை கேட்ட போது அவரை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறி சிலம்பரசன் மீது உடற்பயிற்சி கூட பராமரிப்பாளர் கார்த்திகேயன் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சிலம்பரசன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனின் செல்போன் மற்றும் உடற்பயிற்சி மைய சிசிடிவி கேமிரா பதிவுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். புகாருக்குள்ளான சிலம்பரசன் பெண் மருத்துவரை மட்டும் வீடியோ பதிவு செய்துள்ளாரா? வேறு பெண்களையும் உடற்பயிற்சி செய்தபோது வீடியோ பதிவு செய்துள்ளாரா என்பது குறித்து செல்போனை காவல்துறையினர் ஆய்வுசெய்துவருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement