மேலும் அறிய
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மோசடி கும்பல்.. தமிழகத்தை சேர்ந்த 6 பேர் - சிக்கியது எப்படி?
மோசடி கும்பலின் ஆயிரம் ரூபாய் கமிசன் பணத்திற்கு ஆசைப்பட்டு வங்கி கணக்கில் ரொக்கமாக பணம் எடுத்துகொடுத்த நபர்களையும் கைது செய்த சைபர்கிரைம் காவல்துறையினர்.

கைது செய்யப்பட்டநபர்கள்
Source : whats app
சர்வதேச பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி டெல்லி, கர்நாடகா, மேற்குவங்களம் என நாடு முழுவதும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுவந்த தமிழகத்தை சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆன்லைன் பண மோசடி
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஜூன் 21ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இதில் தன்னிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் 96 லட்சத்து , 57 ஆயிரம் ரூபாயை பல வங்கி கணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்து ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. அரவிந்த் உத்தரவுபடி சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் 38 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை முடக்கியுள்ளனர். தொடர்ச்சியாக முதலீடு செய்த நபர்களுக்கு 12 லட்சம் ரூபாய் பணம் நீதிமன்றம் மூலமாக திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விசாரணையை நடத்திய சைபர்கிரைம் காவல்துறையினர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளின் பணபரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, ஒரே ஒரு வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தி 20 லட்சம் ரூபாயை பெற்று ஆன்லைன் பணமோசடி செய்துள்ளனர். மேலும் அந்த பணத்தை திருச்சி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சீனி முகமது என்ற நபரின் 2 வங்கி கணக்குகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை சீனிமுகமது பணமாக திரும்ப பெற்று வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சீனிமுகமதுவின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் திருச்சியில் வைத்து சீனிமுகம்மதுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஆன்லைன் மோசடி கும்பலை கைது செய்தனர்
அதில் வங்கி கணக்குகளை திருச்சி உறையூரை சேர்ந்த இப்ராகிம் என்பவரது ஆலோசனையின் பேரில் கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு திருச்சி தனரத்தின நகரை சேர்ந்த முகமது சபீர், முகமது ரியாஸ், திருச்சி உறையூரைச்சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளியை சேர்ந்த மகன் முகமது மர்ஜுக் ஆகியோருடன் சேர்ந்து மேற்கண்ட குற்றத்தை செய்தது தெரியவந்தது. இதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு, ஆயிரம் ரூபாய் கமிஷனாக பெற்று லட்சக்கணக்கில் பணம் பெற்றள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மோசடி கும்பலானது மேற்குவங்கம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி பண மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சைபர்கிரைம் தனிப்படை காவல்துறையினர் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிக்கு சென்று ஆன்லைன் மோசடி கும்பலை கைது செய்தனர்.
மோசடி கும்பல் கைது
பின்னர் ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பின்னர் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாடு முழுவதும் சர்வதேச பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் என வாட்ஸ்அப் மூலமாக கூறி கோடிக்கணக்கில் பணமோசடி செய்த கும்பலை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் அழைத்து பாராட்டியதோடு மோசடியில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதிலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட மோசடி கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement