மேலும் அறிய
Advertisement
மதுரையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை - ஷேர் மார்க்கெட்டில் நஷ்டமா? என விசாரணை
மதுரையில் தாய்- மகன் விஷம் அருந்தி தற்கொலை- ஷேர் மார்க்கெட்டில் நஷ்டமா? குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை கரிமேடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கோச்சடை பகுதியில் உள்ள மல்லிகை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 46). இவர்{ எம்.எம்.ஜே} என்கிற ஷேர் மார்க்கெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் நிறைவுபெற்று மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற நிலையில் இரண்டாவது வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2ஆவது மனைவிக்கும் உமா சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 2- ஆவது மனைவி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து உமாசங்கர் தனது தாய் விஜயலெட்சுமி (73) யுடன் வசித்து வந்துள்ளார் . இந்நிலையில் உமா சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிபவர்களும், அவரது நண்பர்களும் செல்போனில் தொடர்புகொண்டபோது போன் எடுக்காத நிலையில் போன் ஆஃப் ஆகியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த உமா சங்கரின் நண்பர்கள் இதுகுறித்து கரிமேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது கதவு திறக்கப்படாமலே இருந்துள்ளது.
இதனையடுத்து கதவை உடைத்துசென்று அறையில் பார்த்தபோது உமாசங்கர் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகிய இருவரும் விஷம் அருந்திய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். உடல் அழுகிவிடக்கூடாது என்பதற்காக அறை முழுவதிலும் ஏசியை ஓடவிட்டபடி விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களுடன் சோதனைக்கு பின்னர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்த நிலையில் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் கடன் ஏற்பட்டு அதனால் மனைவியுடன் சண்டையிட்டதும் தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கரிமேடு் காவல்துறையினர் ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக தற்கொலையா? அல்லது குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் தாயும் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”வடமாநில வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது” - ஆட்சியருக்கு வந்த மனு !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion