மேலும் அறிய
Advertisement
crime: மேலூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானங்கள் பறிமுதல்
மேலூர் அருகே போலி மதுபான தயாரிப்பதற்காக வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானங்கள் பறிமுதல். 750 லிட்டர் மதுபானம் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் போலியாக மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களை மத்திய நுண்ணறிவு போலீசாரால் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூரில் நேற்று 350 மதுபானங்கள் விற்ற மோகன் என்பவரை கைது செய்து மத்திய நுண்ணறிவு போலீசார் விசாரணை நடத்திய போது கொட்டாம்பட்டி பகுதியில் போலி மதுபானங்கள் வைத்திருப்பதாக தகவல் அளித்துள்ளார்.
#மதுரை மாவட்டம் மேலூர் அருகே போலி மதுபான தயாரிப்பதற்காக வைத்திருந்த 15 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 750 லிட்டர் மதுபானம் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.@SRajaJourno | @SouthZoneTNpol | @Mdu_CityPolice | @Stalin__SP | #madurai. pic.twitter.com/G6Weldkd5K
— arunchinna (@arunreporter92) November 9, 2022
அதன்பேரில், மத்திய நுண்ணறிவு காவல் ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள பூபதி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு பகுதியில் போலி மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த ஸ்பிரிட், ஆல்காலிக் மீட்டர், மதுபான ஸ்டிக்கர் மற்றும் மூடிகள் மதுபான மூலப்பொருட்கள் மற்றும் 750 லிட்டர் போலி மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது.
சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி மதுபான மூலப்பொருட்களை பறிமுதல் செய்து மத்திய நுண்ணறிவு போலீசார் இதுதொடர்பாக தென்னந்தோப்பு உரிமையாளர் பூபதியிடம் முதற்கட்டவிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போலி மதுபானம் தொடர்பாக தலைமறைவாக உள்ள லால்குடியை சேர்ந்த ஜான்சன் குறித்து மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pugar Petti : சீர்செய்யப்படாத கால்வாய்..! ஊருக்குள் புகுந்த கண்மாய் தண்ணீர்..! தீர்வுதான் எப்போது..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
விழுப்புரம்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion