மேலும் அறிய
Advertisement
9 வயது சிறுவனை குத்திக்கொன்ற 13 வயது சிறுவன்; மதுரையில் பயங்கரம் - நடந்தது என்ன?
தாயை தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த முகமது சம்சத், ஷா நவாஸை கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலூர் அருகே உருது பள்ளியில், வடமாநில மாணவன் சக மாணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது. உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரையில் செயல்படும் உருது பள்ளி
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கத்தப்பட்டி டோல் கேட் அருகே தனியார் பவுண்டேசன் சார்பில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி உருது பயின்று வரும் நிலையில், அதே பள்ளியைச் சேர்ந்த முகமது சம்சத் (13) என்ற மாணவனுக்கும், ஷாநவாஸ் (09) என்ற மாணவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முகமது சம்சத், சகமாணவனான ஷாநவாஸை காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டு எதுவும் நடக்காது போல பள்ளியில் இருந்துள்ளார். இந்நிலையில், மாணவன் ஷாநவாஸை நீண்ட நேரமாக காணாததையடுத்து இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் மேலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டதில் சக மாணவனான ஷாநவாஸை, மாணவன் முகமது சம்சத் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, மாணவன் உடலை அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மாணவன் ஷாநவாஸ் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மாணவன் முகமது சம்சத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவன் ஷாநவாஸ், முகமது சம்சத்தின் தாயை தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த முகமது சம்சத், ஷா நவாஸை கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடன் பயிலும் மாணவனை, சக மாணவன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Watch video: கஞ்சா போதையில் இளைஞர்கள் செய்த அட்டூழியம் - அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN School Reopen: தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6 பள்ளிகள் திறப்பு- வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion