உ.பி.யில் இருந்து 10 ஆண்டாக ரயிலில் கஞ்சா கடத்திய குல்பி ஐஸ் வியாபாரி - சிக்கியது எப்படி..?
உத்திரபிரதேசத்திலிருந்து ரயில் மூலமாக கடந்தப் பத்து வருடங்களாக புதுச்சேரி, கடலூருக்கு கஞ்சா கடத்திய குல்பி ஐஸ் வியாபாரி கைது.
விழுப்புரம் : உத்திரபிரதேசத்திலிருந்து ரயில் மூலமாக கடந்த பத்து வருடங்களாக புதுச்சேரி, கடலூருக்கு கஞ்சா கடத்திய குல்பி ஐஸ் வியாபாரியை விழுப்புரம் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உத்திரபிரதேசத்திலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் விழுப்புரம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது உத்திரபிரதேசம் கான்பூரை சார்ந்த குல்பி ஐஸ் வியாபாரி அனிஷ் அலி என்பவரின் பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அனிஷ் அலியை கைது செய்து அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய நபரிடம் போலீசார் விசாரணை செய்ததில் கடந்த பத்து வருடங்களாக உத்திரபிரதேசத்திலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து புதுச்சேரி கடலூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
மேலும், செய்தியாளர்களுக்கு கஞ்சா எடுத்து வந்த குற்றவாளியை காண்பிப்பதற்காக வைத்தனர், அப்பொழுது குற்றவாளி போலீசாரிடம் நான் சின்ன பையில் தான் எடுத்து வருகிறேன் மூட்டை மூட்டையாக எடுத்துச் செல்கிறார் அவர்களை விட்டு விடுகிறார்கள் ஹிந்தியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்