Crime: நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி.. கொலையாளிகளை பிடிக்க உதவிய ‘கிங் கோலி’.. என்ன நடந்தது?
பிளம்பிங் வேலை பார்க்கும் அசோக் மூன்று மாதங்களுக்கு முன்பு கமலா வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவர் தனியாக இருப்பதையும், அவரது வீட்டில் நகை மற்றும் பணம் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.
![Crime: நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி.. கொலையாளிகளை பிடிக்க உதவிய ‘கிங் கோலி’.. என்ன நடந்தது? ‘King Kohli’ writing on auto Bengaluru police track down culprits who murdered 82-year-old woman Crime: நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி.. கொலையாளிகளை பிடிக்க உதவிய ‘கிங் கோலி’.. என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/05/970e8ee69811f7bba1e300a15adc9ac71685927545611109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆட்டோ ரிக்ஷாவின் பின்புறத்தில் ‘கிங் கோலி’ என்ற எழுத்து வாசகத்தை வைத்து, கடந்த வாரம் பெங்களூருவில் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேரை மகாலட்சுமிபுரம் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மகாலட்சுமிபுரத்தில் வசிக்கும் கமலா என் ராவ் என்ற கமலம்மா, கடந்த வாரம் அவர் தனியாக வசித்து வந்த அவரது வீட்டில், கை கால் காட்டப்பட்டு இறந்துகிடந்தார். இந்த கொலை சம்பவம் கடந்த மே 27ம் தேதி நடந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.
விசாரணையின் அடிப்படையில் சித்தராஜூ, பிளம்பர் வேலை பார்க்கும் அசோக் மற்றும் அஞ்சனமூர்த்தி ஆகியோரை காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கொலைக்கான காரணம்:
பிளம்பிங் வேலை பார்க்கும் அசோக் மூன்று மாதங்களுக்கு முன்பு கமலா வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவர் தனியாக இருப்பதையும், அவரது வீட்டில் நகை மற்றும் பணம் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டும் அசோக், இதற்காக பைனான்சியர்களுடம் கடன் வாங்கி இருக்கிறார். அசோக்கின் நண்பர்களாக அஞ்சனமூர்த்தி மற்றும் சித்தராஜூ பந்தயத்திற்கு சுமார் 7 லட்சம் வரை கடன் வாங்கி, அதை அடைப்பதற்காக வீட்டில் தனியாக இருந்த கமலாவை கொலை செய்துள்ளனர்.
முதல் முயற்சி:
முன்னதாக, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, கமலாவிடம் உள்ள வணிக இடத்தை வாடகைக்கு கேட்பதாக கூறி ஆட்டோவில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் ஆட்கள் அதிகமாக இருப்பதை கண்டு மூவரும் பின்வாங்கியுள்ளனர்.
இரண்டாவது முயற்சி:
இரண்டாவது முயற்சியாக, சித்தராஜூவும், அஞ்சனமூர்த்தியும் ஆட்டோவில் கமலாவின் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அசோக் நன்கு தெரிந்த நபர் என்பதால் வெளியே காத்திருந்துள்ளார். அப்போது, சித்தராஜூ மற்றும் அஞ்சனமூர்த்திக்கு கமலா பிஸ்கட் சாப்பிட கொடுக்கும்போது, அவர்கள் அவரை படுக்கையறைக்கு இழுத்து சென்று கொலை செய்துள்ளனர்.
மூவரும் வந்துசென்ற காட்சிகள் அனைத்தும் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. முதல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவில் நம்பர் பிளேட்டு கழட்டியுள்ளனர். ஆனால் அந்த ஆட்டோவின் பின்னால் ‘கிங் கோலி’ என்ற வாசகத்தை ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதனை அடையாளமாக கொண்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொலை செய்தவர்கள் கொலை செய்து தாங்கள் திருடி வந்த தங்க நகைகளை அடகு வைத்து, கடனை அடைப்பதற்காக பணத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். கொலைக்கு பிறகு மூவரும் மைசூரு தப்பி சென்ற நிலையில், திரும்பி வந்தபோது கைது செய்த காவல்துறையில் எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)