KGF Killer: கே.ஜி.எப். ஹீரோ போல ஆக வேண்டும்! 5 கொலை செய்த 19 வயது இளைஞர் - ஷாக் வீடியோ
19 வயதான இளைஞர் கே.ஜி.எஃப் மூலம் ஈர்க்கப்பட்டு பிரபலமானவராக நினைத்து 5 தொடர் கொலைகளில் ஈடுபட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நான்கு பாதுகாவலர்களை தூக்கத்தில் கொலை செய்ததாக கூறப்படும் இளைஞர், கே.ஜி.எஃப் மூலம் ஈர்க்கப்பட்டு, பிரபலமாக விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சி:
19 வயதான ஷிவ் பிரசாத் என்று அடையாளம் காணப்பட்டுள்ள இளைஞர், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரைத் தாக்கிய சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மனதை பதற வைக்கும் அக்ககாட்சியில், கொலையாளி, பாதிக்கப்பட்டவரைத் தாக்கி, பின்னர் அவரது தலையை ஒரு கல்லால் அடித்து நொறுக்குவதைக் காட்டுகிறது. பின்னர் யாரும் அவரைப் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த பிறகு இடத்தை விட்டு விலகிச் செல்கிறார்.
महज़ 19-20 साल की उम्र में नाम हासिल करने के लिये आरोपी ने 5 सिक्योरिटी गार्ड को पत्थर से कुचलकर मार डाला ऐसा पुलिस का कहना है. सीसीटीवी फुटेज में वो बेरहमी से कत्ल करता दिख रहा है @ndtv @ndtvindia https://t.co/vupRSULQIj pic.twitter.com/pTKcV4jSDk
— Anurag Dwary (@Anurag_Dwary) September 2, 2022
கே.ஜி.எஃப் ஈர்ப்பு
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை, கே.ஜி.எஃப் படத்தை பார்த்து ஈர்க்கப்பட்டதாகவும், அடுத்ததாக போலீசாரை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாகவும், கொலையாளி கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மூன்று இரவுகளில் மூன்று பாதுகாவலர்களையும், போபாலில் நேற்று இரவு மேலும் ஒருவரையும் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். அவரது ஒரே நோக்கம் பிரபலமடைவதே என்பதால், அவர் தூங்கிக் கொண்டிருந்த பாதுகாவலர்களை மட்டுமே குறிவைத்து தாக்கியுள்ளார்.
மூன்றாவதாக கொலை செய்யப்பட்டவரின் மொபைல் போனை கொலையாளி எடுத்துச் சென்றார். அதனடிப்படையில் தொலைபேசியின் இருப்பிடத்தின் வைத்து பிடிக்கப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதுவரை 5 பேரை கொலை செய்யப்பட்டதாக, கொலையாளி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: நள்ளிரவு பூஜை ! மாந்திரீகம் ! - ஒரே இரவில் 3 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதி!
View this post on Instagram