மேலும் அறிய

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்; கலெக்டருக்கு பறந்த புகார்.. சீல் வைத்து மூடப்பட்ட ஸ்பாக்கள்

நான்கு இடங்களில் ஸ்பா இயங்கி வருகிறது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.

கரூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக ஆதாரங்களுடன் வெளியான புகாரை அடுத்து, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்; கலெக்டருக்கு பறந்த புகார்.. சீல் வைத்து மூடப்பட்ட ஸ்பாக்கள்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் நீளம் ரகுவரன். வழக்கறிஞரான இவர் கரூரில் ஸ்பா என்ற பெயரில் அரசுப் பள்ளி அருகிலும், பல்வேறு இடங்களிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்; கலெக்டருக்கு பறந்த புகார்.. சீல் வைத்து மூடப்பட்ட ஸ்பாக்கள்

அதில், கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் லோட்டஸ் ஸ்பா இயங்கி வருகிறது. இதே போல் நான்கு இடங்களில் ஸ்பா இயங்கி வருகிறது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக மனுவில் தெரிவித்து இருந்தார். சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பாவை இழுத்து மூடி, அதை நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததோடு, வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்; கலெக்டருக்கு பறந்த புகார்.. சீல் வைத்து மூடப்பட்ட ஸ்பாக்கள்

இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா ஸ்பா நடக்கும் இடங்களில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்; கலெக்டருக்கு பறந்த புகார்.. சீல் வைத்து மூடப்பட்ட ஸ்பாக்கள்

அந்த உத்தரவின் பேரில் கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த ரெயின்போ ஸ்பா, ஓஜாஸ் ஸ்பா, க்ரீன் ஸ்பா ஆகியவை இழுத்து மூடப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்தது. அந்த மூன்று இடங்களுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்; கலெக்டருக்கு பறந்த புகார்.. சீல் வைத்து மூடப்பட்ட ஸ்பாக்கள்

இதே போல், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த கல்கி என்ற ஸ்பா சீல் வைத்து இழுத்து மூடப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், வெங்கமேடு பகுதி செயல்பட்டு வந்த கல்கி ஸ்பாவை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், ஸ்பாவினை இழுத்து மூடி விட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 `

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்; கலெக்டருக்கு பறந்த புகார்.. சீல் வைத்து மூடப்பட்ட ஸ்பாக்கள்

கரூர் நகரப் பகுதியில் ஒரே நாளில் ஐந்துக்கு மேற்பட்ட ஸ்பாவை காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் மூடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
Embed widget