Temples Theft: கோயிலில் தொடர்ச்சியாக திருடிய ஆசிரியர்.. திட்டம் போட்டு தூக்கிய போலீஸ்.. என்ன நடந்தது?
தொடர்ச்சியாக கோயில்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகா முழுவதும் உள்ள கோவில்களில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடியதாக அரசு பள்ளி ஆசிரியராக இருந்தவரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திட்டம் போட்டு திருடிய ஆசிரியர்:
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள லிங்கதேவரகொப்பாவைச் சேர்ந்த வசந்த் குமார் என்பவர் அரசு பள்ளி ஆசிரியராக இருந்துள்ளார். அவர் ஆசிரியராக பணிபுரிந்தபோது சிவமோகா, ஹவேரி மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இருந்து மதிப்புமிக்க பொருட்களான தங்கம் உள்ளிட்டவைகளை திருடியுள்ளார்.
இவர், பனவாசி, எல்லாப்பூர், அங்கோலா, ரிப்பன்பேட் ஹோசாநகர், ஹம்சபாவி, ஹிரேகெரூர் மற்றும் ஹவேரி கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் திட்டம் தீட்டி வசந்த் திருடியதாக கூறப்படுகிறது.
திட்டம் போட்ட போலீஸ்:
கோயில் திருடர்களைப் பிடிக்க உத்தர கன்னட போலீசார் ஒரு சிறப்புக் குழுவை அமைத்த பின்னர் வசந்த் மற்றும் சலீம் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டனர். சலீம் என்பவரின் உதவியுடன் வசந்த் மூன்று ஆண்டுகளில் 18க்கும் மேற்பட்ட கோயில்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் கூறினர்.
வசந்த என்பவரிடமிருந்து ரூ .19 லட்சத்துக்கு அதிகமான மதிப்புள்ள கோயில் பொருட்களை போலீசார் மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொள்ளைக்கு உதவிய வசந்தின் கூட்டாளியான சலீமையும் போலீசார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பறிமுதல்:
இச்சம்பவம் குறித்து காவல்துறை தெரிவிக்கையில், பூஜை மற்றும் பிற கோயில் சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட வெண்கலம், தாமிரம் மற்றும் வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட மதிப்புமிக்க பொருட்களை வசந்த்திடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
View this post on Instagram
மேலும் வசந்திடமிருந்து திருடப்பட்ட மொத்த மதிப்பு ரூ .19 லட்சத்துக்கு அதிகமாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து 9 கிராம் தங்க நகைகள், ரூ.1.8 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.2.29 லட்சம் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Also Read: Crime: தென்காசி காற்றாலையில் லட்சக்கணக்கில் திருட்டு; கையும் களவுமாக போலீஸிடம் சிக்கிய கும்பல்