மேலும் அறிய

Crime: தென்காசி காற்றாலையில் லட்சக்கணக்கில் திருட்டு; கையும் களவுமாக போலீஸிடம் சிக்கிய கும்பல்

மீண்டும் ஒயர்களை எடுத்துச்செல்ல வரலாம் என எண்ணிய காவல்துறையினர் அவர்களுக்கு வலை விரித்து காத்திருந்தனர். அப்போது அவர்கள் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கினர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை உள்ளது. அந்த காற்றாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காற்றாலையை தற்போது வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கி பழுதான நிலையில் இருந்த காற்றாலையை பழுது பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காற்றாலையின் உள்பகுதியில் சத்தம் கேட்டுள்ளது. அதை கவனித்த காவலாளி காற்றாலை வந்த போது பூட்டு உடைக்கபட்டுருந்தை கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காற்றாலையின் தரப்பில் ஆலங்குளம் காவல் நிலையத்திலும், தீயணைப்பு மீட்பு நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார் காற்றாலை அலுவலகத்தில் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு விலை உயர்ந்த காப்பர் வயர்கள் சுமார் 600 கிலோ மற்றும் அங்குள்ள கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.  அதன் மதிப்பு சுமார் 10.50 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் அலுவலகம்  அருகில் உள்ள  காற்றாடியில்  சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்ட காப்பர் வயர்கள் கிடந்துள்ளது.

Crime: தென்காசி காற்றாலையில் லட்சக்கணக்கில் திருட்டு; கையும் களவுமாக போலீஸிடம் சிக்கிய கும்பல்

திருடியவர்கள் மீண்டும் வந்து இதனை எடுத்துச்செல்ல வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்தனர். மேலும் அந்த காப்பர் வயர்களை ஆலங்குளம் போலீசார் கைப்பற்றினர். பின் சுற்றியுள்ள பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் சந்தேகப்படும்படியான கார் மற்றும் டெம்போ மினி லாரி சென்றுள்ளது. இவர்கள் மீண்டும் ஒயர்களை எடுத்துச்செல்ல வரலாம் என எண்ணிய காவல்துறையினர் அவர்களுக்கு வலை விரித்து காத்திருந்தனர். அப்போது அவர்கள் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கினர்.

Crime: தென்காசி காற்றாலையில் லட்சக்கணக்கில் திருட்டு; கையும் களவுமாக போலீஸிடம் சிக்கிய கும்பல்

அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவள்ளுர் மாவட்டம் மாதவரத்தை சேர்ந்த சதிஷ்குமார்(32), திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் பிரபாகரன் (44), சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(28), ஸ்ரீவில்லிபுதூர் இனாம் கரிசல்குளம் சிவக்குமார் (40), திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (41), செங்குன்றம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (34), கும்மிடிப்பூண்டி ஆன்ரன்  செல்வகுமார் (37) என தெரிய வந்தது. மேலும் இவர்கள் இதே போன்று பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.. காப்பர் ஒயர் திருட்டு சம்பவத்தில் 7 பேர் கொண்ட கும்பல் காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget