பேஸ்ட்.. மசாலா.. ராஜீவ் காந்தி நினைவகத்தின் அருகே கிடைத்த மர்ம சூட்கேஸ்.. ’டம்மி பாவா’ என சொல்லிவிட்டு சென்ற போலீஸ்
Rajiv Gandhi memorial : மர்ம சூட்கேஸில் சாக்லேட் பவுடரும் மசாலா பவுடரும் மட்டுமே இருந்ததால் போலீசார் நிம்மதி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் மர்ம சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
ராஜீவ் காந்தி நினைவிடம்
காஞ்சிபுரம் (Kanchipuram) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடம் (rajiv gandhi memorial sriperumbudur ) அமைந்துள்ளது. 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது , தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து உயிர் நீத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டு நினைவகத்தை சுற்றி பார்த்து செல்வது வழக்கம்.