மேலும் அறிய
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: கொலை செய்து ஏரியில் வீசிய காதலன்! நடந்தது என்ன?
காதலனுக்கு வீட்டில் வேறு ஒரு பெண்ணை நிச்சயத்தால் காதலித்த பெண்ணை மறுப்பு தெரிவித்ததாக தகவல்
![திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: கொலை செய்து ஏரியில் வீசிய காதலன்! நடந்தது என்ன? kanchipuram sriperumbathur over who was killed and thrown into a lake because his girlfriend kept insisting him to marry her திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: கொலை செய்து ஏரியில் வீசிய காதலன்! நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/14f6b766ab69c73718dab8fe65d657721682525088981109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஷீபா - சாமுவேல்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த ஏலாகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாரா. இவரது கணவர் இறந்த நிலையில் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மூன்றாவது மகள் ஷீபா (24) குன்னவாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற மகள் ஷீபா காணவில்லை என அவரது தாயார் நேற்று ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
![திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: கொலை செய்து ஏரியில் வீசிய காதலன்! நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/456fe938b5baa583c5611c79bb3676a01682524879419109_original.jpg)
இந்த நிலையில் வாலாஜாபாத் அடுத்த கோவல வீடு ஏரிக்கரை கால்வாயில் இளம் பெண் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைபற்றி விசாரித்தபோது காணாமல் போன ஏலக்காமங்களம் கிராமத்தை சேர்ந்த ஷீபா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
![திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: கொலை செய்து ஏரியில் வீசிய காதலன்! நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/6d519d83c403e71c6488c8ba279f9a071682524959621109_original.jpg)
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பண்ருட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சாமுவேல் (25) இவர் சொந்தமாக லாரி வைத்து ஒட்டி வருகிறார். இவரும் ஷீபாவும் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து காதலித்து வந்த இருவரும் சமீபத்தில் சாமுவேல் பெற்றோர்கள் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பார்த்து வந்த நிலையில் இந்த விவகாரம் ஷிபாவுக்கு தெரியவந்தது.
இந்நிலையில் ஷீபா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் ஷீபாவை கொலை செய்துவிட்டு கோவலமேடு ஏரிக்கரை கால்வாயில் போட்டுவிட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சாமுவேலை ஒரகடம் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion