83 வழக்குகள்.. தொடர் கொலைகள்.. காஞ்சிபுரத்தில்பிரபல ரவுடி பொய்யாகுளம் தியாகு கைது
Poiya Kulam Thiyagu: காஞ்சிபுரத்தை சேர்ந்த 83 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி பொய்யாகுளம் தியாகுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017 ஆம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதர் தனபால் காஞ்சிபுரத்தில் அசைக்க முடியாத தாதா வலம் வந்து இருந்தார். இதனால் காஞ்சிபுரத்தில் இருந்த பல தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என பல தரப்பு மக்களும் பயத்தில் இருந்து வந்தனர். காஞ்சிபுரத்தில் தனது ரவுடிகள் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த பல தளபதிகளை ஸ்ரீதர் தன்னிடம் வைத்திருந்தார்.
பொய்யாகுளம் தியாகு
அந்த வகையில் ஸ்ரீதரின் முக்கிய கூட்டேளியாக பொய்யாகுளம் தியாகு இருந்து வந்தான். தொடர்ந்து பொய்யா குளம் தியாகு, ஸ்ரீதரின் இடத்தைப் பிடிக்க அவரது மறைவுக்கு பிறகு பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். அதேபோன்று ஸ்ரீதரின் மற்றொரு முக்கிய, கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன.
ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தியாகு ஆகியோர் இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்ததாக தாதா போட்டியில் 13-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்து கொண்டனர். பொய்யா குளம் தியாகு மீது 12 கொலை வழக்கு, 24 கொலை முயற்சி வழக்கு, 48 இதர வழக்கு என 84 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வசூல்ராஜா கொலை வழக்கு
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரபல ரவுடி வசூல்ராஜாவை, கல்லூரி மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமான முறையில் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கிய ரவுடியை கொலை செய்தால், தாமும் பிரபலமாகலாம் என்பதற்காகவே, இந்த கொலை நடந்தது என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பொய்யா குளம் தியாகு குற்றவாளியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தலை மறைவு
இந்தநிலையில் வசூல்ராஜா கொலை வழக்கில் தியாகு தலை மறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாமினில் வெளிவந்த தலைமறைவாக இருந்த தியாகவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பெங்களூர் பதுங்கி இருந்த தியாகுவை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் முக்கிய ரவுடி ஒருவரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பொதுமக்கள் இடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.





















